இரவு நேர ஊரடங்கு வேஸ்ட்.. என்ன செய்யனும் தெரியுமா? ஆலோசனை கூறும் மருத்துவ நிபுணர்..!
டெல்லி: கோவிட்-19 மற்றும் ஓமிக்ரான் வைரஸ் பரவலுக்கு எதிராக இரவு நேர ஊரடங்கு எந்த பயனும் தராது எனவும், கூட்டத்தை தவிர்ப்பது, மூன்றடுக்கு முக்கவசம் அணிவதே பயன் அளிக்குமென தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் மெல்ல பரவத் தொடங்கி இருப்பதையடுத்து, அதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகராஷ்டிரா, டெல்லி, கேரளா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம் என இதுவரை மொத்தம் 19 மாநிலங்களில், 550க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 141 பேரும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 142 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 41 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், குஜராத்தில் 49 பேரும், கேரளாவில் 57 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஓமிக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ளன.

டெல்லி, கர்நாடகாவில் ஊரடங்கு
தலைநகரான டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் புதிதாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஓமிக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவிலும் இருபத்தி எட்டாம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. புத்தாண்டு வருவதால் அது தொடர்பாக கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் ஓமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இரவு நேர ஊரடங்கினை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.

மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு
இதுமட்டுமல்லாது அசாம், உத்தரப் பிரதேசம் , கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களிலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

பிரதீப் கவுர் கருத்து
இந்தநிலையில் ஓமிக்ரான் பரவலுக்கு எதிராக இரவுநேர ஊரடங்கு எந்த விதத்திலும் பயன்தராது என தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், "கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பரவலுக்கு எதிராக இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை. முறையான தரமான 3 அடுக்குள்ள முகக்கவசங்களை அணியுங்கள் அல்லது சர்ஜிக்கல் முகக் கவசங்களை அணியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

மூன்றடுக்கு முகக்கவசம்
மேலும், பொதுவெளியில் கூட்டம் கூடுவதோ, கூட்டங்களில் செல்வதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மறவாமல் இரண்டாவது டோஸை போட்டுக்கொள்ளுங்கள். ஜனவரி 10ம் தேதிக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் தவறாமல் போட்டுக்கொள்ளுங்கள்." எனவும் தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications