மோசடி விவகாரம்.. அனில் அம்பானியின் ரூ.1452 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!
டெல்லி: வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான 1,452 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஏற்கனவே அனில் அம்பானிக்கு சொந்தமான 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, வங்கி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றம்சாட்டப்பட்டது.

அனில் அம்பானி, 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. 2010 - 2012 காலகட்டத்தில் அனில் அம்பானி குழுமம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் ரூ.40,185 கோடி கடன் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
மேலும், இந்த நிறுவனம் பெற்ற கடனை மோசடி என 9 வங்கிகள் அறிவித்துள்ளன. ஒரு நிறுவனத்திற்காக ஒரு வங்கியில் பெறப்பட்ட கடன் தொகை மற்ற நிறுவனங்களுக்காக மற்ற வங்கிகளுக்கு திருப்பிவிடப்பட்டதாகவும், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதும் அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
12,600 கோடி ரூபாய் கடனை அடைப்பதற்காக அனில் அம்பானியின் நிறுவனங்கள் 13,600 கோடி ரூபாயை வேறு நிறுவனங்களுக்கு அளித்ததும், 1,800 கோடி ரூபாயை பரஸ்பர நிதியில் முதலீடு செய்ததும் தெரியவந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே இதுதொடர்பாக அனில் அம்பானிக்கு சொந்தமான 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில், மேலும் புதிதாக 1,452.51 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நவி மும்பையில் உள்ள திருபாய் அம்பானி அறிவு நகரம் மற்றும் மில்லினியம் வணிக பூங்கா, புனே, சென்னை, புவனேஸ்வரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதன் மூலம் அனில் அம்பானியின் முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு 8,997 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications