தனியுரிமை, பாதுகாப்பு! - இந்தியா திருப்திபடுத்தவில்லை - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்
டெல்லி: மருத்துவத்துறையில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் நம் மீது திருப்தி ஏற்படாததால்தான். என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
தனியார் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய பொருளாதார கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநரும், பொருளாதார அறிஞருமான ரகுராம் ராஜன் பங்கேற்றார்.
அவர் இந்தியாவின் பொருளாதாரமும், அது எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

குடிமக்களை மரியாதையாக நடத்த வேண்டும்
அவர் தனது உரையில் "ஒரு ஜனநாயக நாடு அனைத்து தரப்பு குடிமக்களையும் சமமாக, மரியாதையாக நடத்தினால், அது ஏழை நாடாக இருந்தாலும் வெளிநாடு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறும். அதன் காரணமாக அந்த நாட்டின் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள். 'நல்லது செய்யும் இந்த நாட்டின் பொருட்களை வாங்குகிறேன்' என்று கூறுவார்கள்.

சர்வதேச சந்தை
அதன் மூலமாக நமது நாட்டின் சந்தை விரிவடையும். பொருளாதார சந்தைகளில் மட்டுமல்ல, சர்வதேச உறவுகளும் இதை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக ஒரு நாட்டை மற்ற நாடுகள் தேர்வு செய்வது அந்நாட்டில் சிறுபான்மை சமுதாய மக்கள் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை பொறுத்துதான்.

இந்திய சந்தைக்கு ஆபத்து
சிறுபான்மையினருக்கு எதிரான முகம், இந்திய பொருட்களின் சந்தையை சுருக்கிவிடும். சர்வதேச நாடுகளும் நம்மை நம்பிக்கைகுரிய நாடாக கருத மாட்டார்கள். சீனா தங்கள் நாட்டு சிறுபான்மை மக்களை மோசமாக நடத்தியதன் விளைவை தற்போது அனுபவித்து கொண்டிருக்கிறது. உய்கூர் முஸ்லிம்கள் மற்றும் திபெத்தியர்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கை காரணமாக சர்வதேச சந்தையில் சீனாவின் பொருட்களை வாங்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்பு
அதேநேரம் உக்ரைனுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய ஆதரவு எழுந்ததற்கு காரணம், அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கி, ஜனநாயக உலகம் எதை எதிர்பார்க்கிறதோ அதை செய்ததால்தான். சேவைத் துறை ஏற்றுமதியில் இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. நாம் அதை கைப்பற்ற வேண்டும்.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
அதே நேரம் தனியுரிமை கொள்கைக்கு மேற்குலக நாடுகள் எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவத்துறையில் நமக்கான வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் இந்தியா மீது திருப்தி ஏற்படாததால்தான். பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான அச்சங்கள் வெற்றிக்கு பெரும் தடையாக இருக்கும்.

நாட்டின் மாண்பை சிதைத்துவிடும்
இந்தியாவின் அரசியலமைப்பு நிறுவனங்களான தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்றவற்றை குறைத்து மதிப்பிடுவது நம் நாட்டின் ஜனநாயக மாண்புகளை சிதைத்துவிடும். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் போன்றவற்றை தவிர்க்க மத்திய அரசு சட்ட திருத்தம் குறித்து பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தலாம்." என்றார்.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications