டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓ இதுதான் காரணமா! டெல்டா முதல் ஓமிக்ரான் வரை.. உருமாறிய கொரோனா வகைகளுக்கு வித்தியாசமான அறிகுறிகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆல்பா தொடங்கி இப்போது ஓமிக்ரான் வரை கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரசின் அறிகுறிகள் பெரியளவில் மாறியுள்ளன. அதற்கான காரணங்களை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil

    ஓமிக்ரான் கொரோனா தான் இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் பரவிய கொரோனா வகைகளுடன் ஒப்பிடுகையில் பல வகைகளில் ஓமிக்ரான் வேறுபட்டது.

    குறிப்பாக அறிகுறிகள், குணமடையும் வேகம், நோய் தீவிரம் மற்றும் பரவும் வேகம் ஆகியவற்றில் முந்தைய கொரோனா வகைகளில் இருந்து மாறுபட்டே உள்ளது.

    கூட்டணிக்கு பலம் சேர்ப்போம்! சீட் எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமில்லை! அசராத ஜி.கே.வாசன்! கூட்டணிக்கு பலம் சேர்ப்போம்! சீட் எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமில்லை! அசராத ஜி.கே.வாசன்!

     அறிகுறிகள்

    அறிகுறிகள்

    கொரோனா பரவல் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் அறிகுறிகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு முன்பு வரை காய்ச்சல், இருமல் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு ஆகியவை கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக இருந்து வந்தது. ஆனால், ஓமிக்ரான் கொரோனாவில் இந்த அறிகுறிகள் முக்கியமானதாக இருப்பதில்லை. அதற்குப் பதிலாக, தொண்டைப் புண், தும்மல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் முக்கியமாக உள்ளன.

    டெல்டா

    டெல்டா

    அதேபோல கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு ஓமிக்ரான் ஏற்படும்போது சளி தான் முக்கிய அறிகுறியாக உள்ளதாக Zoe நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேபோல டெல்டா கொரோனா சமயத்தில் மூச்சுத் திணறல் முக்கிய பிரச்சனையாக இருந்தது. ஆனால், ஓமிக்ரான் கொரோனாவில் மூச்சுத் திணறல் என்பது கிட்டதட்ட யாருக்குமே ஏற்படவில்லை. இது ஒரு நல்ல விஷயமாகும்.

     டெல்டா vs ஓமிக்ரான்

    டெல்டா vs ஓமிக்ரான்

    டெல்டா கொரோனாவை காட்டிலும் ஓமிக்ரான் வேகமாகப் பரவினாலும் கூட அது லேசான பாதிப்பையே பெரும்பாலும் ஏற்படுத்துகிறது. அதேநேரம் டெல்டா, ஓமிக்ரான் அறிகுறிகளில் சில ஒற்றுமைகள் இருக்கவே செய்கிறது. குறிப்பாக மூக்கடைப்பு, தலைவலி, சோர்வு, தொண்டைப் புண் ஆகியவை இரண்டு கொரோனா வகைகளிலும் பொதுவான அறிகுறிகளாக உள்ளன. டெல்டா கொரோனாவில் தும்மல், வாசனை மற்றும் சுவை இழப்பு அதிகம் இருந்தது. ஆனால், ஓமிக்ரானில் இது இல்லை.

     முக்கிய அறிகுறிகள் என்ன

    முக்கிய அறிகுறிகள் என்ன

    ஓமிக்ரான் கொரோனாவில் மூக்கு ஒழுகுதல் தான் முக்கியமான அறிகுறியாக உள்ளது. ஓமிக்ரான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 73% பேருக்கு மூக்கு ஒழுகுதல் முக்கிய அறிகுறியாக உள்ளது. அதைத் தொடர்ந்து 68 சதவீதம் பேருக்குத் தலைவலி, 64 சதவீதம் பேருக்குச் சோர்வு மற்றும் 60 சதவீதம் பேருக்கு தும்மல் பிரச்சனைகள் உள்ளன. மேலும், கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் இடையே கூட அறிகுறிகளில் வேறுபாடுகள் உள்ளன.

     மாற்றம் ஏன்

    மாற்றம் ஏன்

    கடந்த இரண்டு ஆண்டுகளில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை உருமாறியுள்ளன. எனவே இது போன்ற உருமாறிய கொரோனா வகைகளுக்கு வெவ்வேறு பண்புகள் உள்ளன. அவை ஏற்படுத்தும் அறிகுறிகளும் வேறு வேறாக உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட எந்த இரண்டு வகைகளும் ஒரே தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

     இது தான் காரணம்

    இது தான் காரணம்

    ஒவ்வொரு உருமாறிய கொரோனா வகைகளுக்கும் ஒவ்வொரு வகையான அறிகுறி உள்ளதற்கு இது தான் காரணம். இதைத் தாண்டி கொரோனா வேக்சின்கள் வைரஸ் பரவலின் தீவிர தன்மை மற்றும் நீண்டகால அறிகுறிகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனா வேக்சின் போட்டவர்களிடையே தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    No two COVID variants had the same nature and acted similarly: Reason behind Different symptoms of different COVID variants shows.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X