டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணத்தால் விளையாடினார்கள்.. கட்சிகளை உடைத்தார்கள்! எல்லாம் ஜனாதிபதி தேர்தலுக்கே -யஷ்வந்த் சின்ஹா பரபர

Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பணம் விளையாடுவதாகவும், இதில் வெற்றிபெறுவதற்காகவே கட்சிகளை உடைத்து கட்டாயப்படுத்தி வாக்களிக்க செய்வதாகவும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்து உள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி இன்று நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

இரவு 10.30 மணி.. 4 இடங்களில் ரத்தம்.. சிசிடிவி.. கள்ளக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? பின்னணி இரவு 10.30 மணி.. 4 இடங்களில் ரத்தம்.. சிசிடிவி.. கள்ளக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? பின்னணி

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்

எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுகிறார்.

இன்று வாக்குப்பதிவு

இன்று வாக்குப்பதிவு

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறைப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தந்த மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாக்களித்தார்.

யஷ்வந்த் சின்ஹா பேட்டி

யஷ்வந்த் சின்ஹா பேட்டி

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டு உள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. நாட்டில் ஜனநாயகம் நிலைக்க வேண்டுமா? முடிய வேண்டுமா என்ற வழியை இதுவே அமைத்துக் கொடுக்கும். அனைத்து வாக்காளர்களும் தங்கள் மனசாட்சி சொல்வதை கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

பணத்தின் விளையாட்டு

பணத்தின் விளையாட்டு

இது ஒரு ரகசிய தேர்தல். எனவே அவர்கள் தங்களின் விருப்ப உரிமையை பயன்படுத்தி எனக்கு வாக்களித்து ஜனநாயகத்தை காப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நான் இதில் அரசியல் ரீதியாக மட்டும் போட்டியிடவில்லை. அரசு நிறுவனங்களை எதிர்த்தும் போட்டியிடுகிறேன். அவர்களின் பலம் அதிகரித்துவிட்டது. அவர்கள் அரசியல் கட்சிகளை உடைத்து தங்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். மிகப்பெரிய பண விளையாட்டு இதில் நடந்திருக்கிறது." என்றார்.

English summary
Game of money involved in Indian president election - Yashwant Sinha allegation:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X