டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கம்முணு இருங்க.. குளிருக்கு கும்முணு இருக்க ரம் குடிக்காதீங்க.. வானிலை மையம் வார்னிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: கடுங்குளிரிலிருந்து மீள யாரும் மது அருந்த வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. காலை 8 மணி வரை வாகனங்களோ எதிரே வரும் ஆட்களோ தெரியவில்லை. பனிப் போர்வை போர்த்தியது போல் இருக்கிறது வடமாநில சாலைகள்.

இந்த குளிருக்கு இதமாக மக்கள் தீயை மூட்டி குளிர் காய்கிறார்கள். மேலும் சூடான பொருட்களை உண்கிறார்கள். உல்லன் ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள்.

கொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்புகொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

ஆஃப் மோட்

ஆஃப் மோட்

பேன், ஏசி உள்ளிட்டவை ஆஃப் மோடில் உள்ளன. இந்த நிலையில் குளிர் தாங்க முடியாமல் சிலர் இறக்கும் நிலையும் ஏற்படுகிறது. டெல்லி போராட்டக் களத்தில் போராடி வரும் விவசாயிகளில் 30க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். அவர்களில் பலர் குளிர் தாங்க முடியாமல் இறந்ததாக கூறப்படுகிறது.

பஞ்சாப்

பஞ்சாப்

இந்த நிலையில் டிசம்பர் 29-ஆம் தேதி முதல் பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் குளிர் மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குளிரில் இருந்து காத்துக் கொள்ள மது அருந்த வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடக்கு ராஜஸ்தான்

வடக்கு ராஜஸ்தான்

வடமாநிலங்களில் வரும் நாட்களில் குளிர் மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

மது அருந்த வேண்டாம்

மது அருந்த வேண்டாம்

வீடுகளிலேயே இருக்க வேண்டும். வைட்டமின்-சி நிறைந்த பழங்களை உண்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலுக்கு தேவையான வலிமையை கொடுக்கும். கடுமையான குளிர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்ள உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருங்கள். ஆல்கஹால் உடல் வெப்பத்தை மேலும் வெகுவாக குறைத்துவிடும் என்பதால் மது அருந்த வேண்டாம். வீடுகளிலோ அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ மது அருந்துவது நல்லதல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
Indian Meteorological Department warns the people not to take alcohol to keep warm their bodies in this cold wave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X