டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் 1 கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கப் போய் 90 கேஸ்களை கோட்டை விட்டிருக்கிறோமாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என உறுதி செய்கிற போது கொரோனா பாதித்த 90 பேரை நாம் கண்டுபிடிக்க முடியாமல் கோட்டை விட்டிருக்கிறோம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. பொதுவாக இந்திய அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைதல் எண்ணிக்கை அதிகரித்தும் இருந்து வருகிறது.

ஆனால் Department of Science and Technology (DST) என்ற நிறுவனமானது சொல்லுகிற தகவல் நமக்கு அதிர்ச்சியை தரக் கூடியதாக உள்ளது. அதாவது இந்திய அளவில் பொதுவாக ஒரு கொரோனா பாதித்த நோயாளியை நாம் உறுதி செய்து கொண்டிருக்கும் தருணத்தில் 90 கொரோனா கேஸ்களை தவறவிட்டிருக்கிறோம் என்கிறது அந்த நிறுவனத்தின் ஆய்வு விவரம்.

India missed 90 infections for every Coronavirus case

இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறாகவும் இருக்கிறதாம். உதாரணமாக டெல்லி, கேரளாவில் 1 கொரோனா நோயாளியை உறுதிப்படுத்துகிற போது 25 கொரோனா கேஸ்கள் தவறவிடப்படுகின்றன; ஆனால் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலோ 1 கொரோனா நோயாளியை அடையாளம் காணும் போது சுமார் 300 கொரோனா கேஸ்களை தவறவிட்டிருக்கிறார்களாம்.

தமிழகத்தில் இன்று மேலும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு- 12 பேர் பலிதமிழகத்தில் இன்று மேலும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு- 12 பேர் பலி

பெரும்பாலான மாநிலங்களில் 70 முதல் 120 கொரோனா கேஸ்கள் தவறவிடப்பட்டுள்ள்னவாம். இத்தகைய நிலை இந்தியாவில்தான் இல்லை உலகம் முழுவதுமே இருக்கிறது என்கிறார் இந்த நிறுவனத்தின் உறுப்பினரான மணீந்தரா அகர்வால். இத்தாலி, இங்கிலாந்தில் ஒவ்வொரு கொரோனா நோயாளியை உறுதிப்படுத்தும் போதும் 10 முதல் 15 கொரோனா கேஸ்கள் தவறவிடப்படுகின்றன என்கிறார் அகர்வால்.

இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் மருத்துவர் கங்கதீப் காங்-ம் இடம்பெற்றிருக்கிறார்.

English summary
According to the Department of Science and Technology (DST) Reports that India missed 90 infections for every Coronavirus case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X