Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் 2 ஆண்டுக்கு பின் சர்வதேச விமான சேவை துவக்கம்! இன்று முதல் வெளிநாடுகளுக்கு ஈசியா போகலாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் 2 ஆண்டுக்கு பிறகு இன்று மீண்டும் துவங்கப்பட்டது. கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு பறக்கலாம்.

2019 இறுதியில் சீனாவில் கொரோனா பரவ துவங்கியது. 2020 துவக்கத்தில் இந்தியாவுக்குள் வைரஸ் நுழைந்தது. அதேபோல் பிற நாடுகளுக்குள் வைரஸ் பரவியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டன.

2020 மார்ச் மாதம் முதல் இந்தியா-சர்வதேச நாடுகள் இடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மெல்ல மெல்ல பாதிப்புகள் குறைய உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கியது. அதன்பிறகு கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு சில நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயங்கப்பட்டன.

இன்று முதல் சர்வதேச நாடுகளுக்கு...

இன்று முதல் சர்வதேச நாடுகளுக்கு...

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் சர்வதேச விமானங்களை முழுவதுமாக இயக்க இந்தியா முடிவு செய்தது. மார்ச் இறுதியில் சர்வதேச விமானங்கள் முறையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயங்க துவங்கி உள்ளன.

கொரோனாவுக்கு முன்பு இருந்ததுபோல்

கொரோனாவுக்கு முன்பு இருந்ததுபோல்

கொரோனா பாதிப்பு இன்னும் முழுவதுமாக முடிவுக்கு வராவிட்டாலும் கூட தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததுபோல் முழுமையாக விமான சேவை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சில முக்கிய அம்சங்களை மத்திய விமானத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

100 சதவீத பயணிகள்

100 சதவீத பயணிகள்

அதன்படி அனைத்து சர்வதேச விமானங்களிலும் 100 சதவீதம் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா பரவல் குறைந்துள்ளதால் விமா பணிக்குழுவினர் கொரோனா தடுப்புக்கான சிறப்பு ஆடைகளை அணிய தேவையில்லை. மருத்துவ அவசர தேவைகளுக்காக மூன்று இருக்கைகளை காலியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் மாஸ்க் அணிந்து சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் சானிடைசர், என்95 மாஸ்க் எடுத்து செல்லலாம். முன்னெச்சரிக்கையாக கவச உடைகளையும் கொண்டு செல்லலாம்.

சுற்றுலா விசாக்கள்

சுற்றுலா விசாக்கள்

வெளிநாட்டு சுற்றுா பயணிகள் அனைவருக்கும் இந்த மாதம் துவக்கத்தில் இருந்து புதிய விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் செல்லுபடியாகும் இ-டூரிஸ்ட் விசாக்கள் 156 நாடுகளின் குடிமக்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வர உள்ளது. கொரேனாாவால் விருந்தோம்பல், சுற்றுலா துறைகள் 2 ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த விமான போக்குவரத்தால் விருந்தோம்பல் சுற்றுலா துறை ஊக்கம் பெரும்.

 எரிபொருள் விலை உயர்வு

எரிபொருள் விலை உயர்வு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் சர்வதேச விமான போக்குவரத்து துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் முன்கூட்டியே விமான சேவை துவங்கியிருக்கும் என கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து வருவதால் தற்போது தொடர்ச்சியாக விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியிருந்தார். மேலும் எரிபொருள் விலை உயர்வு பிரச்சனையாக இருக்கும் என அவர் தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛2020 காலகட்டத்தில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.21 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது ரூ.91 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 4.5 மடங்கு விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது'' என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+