அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. கையெழுத்தாவது எப்போது? வெளியான முக்கிய தகவல்!
டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது? எப்போது நடைமுறைக்கு வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா பரஸ்பர வரிகளை 18% ஆகக் குறைக்கும். அதேசமயம், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்காவிலிருந்து $500 பில்லியன் மதிப்பிலான எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை வாங்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில், அமெரிக்காவிடமிருந்து $500 பில்லியன் மதிப்பில் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாய பொருட்கள் மற்றும் விமான உதிரி பாகங்களை இந்தியா வாங்கும். இந்தியா வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு. மட்டுமல்லாது இந்தியாவின் கிராமப்புறங்கள் வேளாண் தொழிலை நம்பிதான் இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமெரிக்கா பொருட்கள் இந்திய சந்தையில் திறந்துவிடப்படும் என்றால், இங்குள்ள விவசாயிகளின் நிலை என்ன? என கேள்வி எழுந்தது.
இதற்கு விளக்கமளித்துள்ள மத்திய அரசு, பால், மீன்வளத் துறைகள் மற்றும் விவசாயிகள் அமெரிக்க ஏற்றுமதியிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன என தெரிவித்திருக்கிறது.
என்னதான் மத்திய அரசு உறுதியாக கூறியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து சர்ச்சை வெடித்தது. ரஷ்யா உடனான உறவு மற்றும் வேளாண் பொருட்கள் இறக்குமதி குறித்து அரசு நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. மறுபுறம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவன துறை மீதான வரியை குறைத்திருப்பதன் மூலம் இந்த துறையில் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என்றும், பின்னர் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இருப்பினும் இந்திய வேளாண் துறையை அமெரிக்கா காலி செய்ய இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
-
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications