டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுக்கு இன்ஸ்டாகிராம் வேலை செய்யுதா? நாட்டின் பல நகரங்களில் முடங்கிருச்சாம்..

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பல முக்கிய நகரங்களில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள செயலி முடங்கியதால் பயனர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தி வரும் மார்க் ஜூக்கர்பெர்க்கின் மற்றொரு ஹிட்டான சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம்.

அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு! அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!

புகைப்படம், வீடியோ பிரியர்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம்தான் தற்போதைய 2K கிட்ஸுகளின் ஆஸ்தான சமூக வலைதளம்.

முடங்கிய இன்ஸ்டாகிராம்

முடங்கிய இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் நாட்டின் பல முக்கிய நகரங்களில் இன்ஸ்டாகிராம் வேலை செய்யவில்லை என பயனர்கள் புகார்களை தெரிவித்து இருக்கின்றனர். ஏராளமான பயனர்கள் இன்ஸ்டாகிராம் முடக்கம் குறித்த கருத்துக்களை ட்விட்டர், பேஸ்புக் போன்ற இதர சமூக வலைதளங்களில் கருத்திட்டு இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் காரணம் கேட்டு வந்தனர்.

என்ன சிக்கல்?

என்ன சிக்கல்?

பெயர், பாஸ்வேர்டு கொடுத்தாலும் இன்ஸ்டாகிராமுக்குள் தங்களால் லாக் இன் செய்ய முடியவில்லை என்றும், ஏற்கனவே லாக் இன் செய்தவர்களுக்கு புதிய பதிவுகள் எதுவும் காட்டவில்லை என்றும், தங்களால் புதிதாக புகைப்படங்கள், வீடியோக்களை பகிர முடியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எந்தெந்த நகரங்கள்?

எந்தெந்த நகரங்கள்?


இன்று காலை 9:30 மணி முதல் பகல் 12:45 மணி வரை 3 மணி நேரம் 15 நிமிடங்கள் இன்ஸ்டாகிராம் முடங்கியதாக டவுன் டிடெக்டார் என்ற இணையதளம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்ஸ்டாகிராம் முடங்கி இருக்கிறது.

 தமிழ்நாட்டில் என்ன நிலை?

தமிழ்நாட்டில் என்ன நிலை?

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற புகார்கள் வரவில்லை. சொல்லப்போனால் முடங்கியதாக கூறப்பட்ட டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த சில பயனர்கள் தங்களால் இன்ஸ்டாகிராமை குறிப்பிட்ட அந்த நேரத்துக்குள் பயன்படுத்த முடிந்தது என தெரிவித்து உள்ளனர்.

 ஏப்ரல் மாதம் முடக்கம்

ஏப்ரல் மாதம் முடக்கம்

இந்த முடக்கத்தை இன்ஸ்டாகிராம் தரப்பும் ஒப்புக்கொள்ளவில்லை. இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. இன்ஸ்டாகிராம் செயலியின் பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு இணையாகவே அதன் முடக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இரவும் இதேபோல் இன்ஸ்டாகிராம் செயலி முடங்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Instagram outage in Major cities in India causes buzz in other social media platforms: நாட்டின் பல முக்கிய நகரங்களில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள செயலி முடங்கியதால் பயனர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X