டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க போட்ட ஒப்பந்தம் ரத்தாகுமா? எதிர்க்கட்சிகள் அச்சம்.. அமித்ஷா விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Article 370 Removed | நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?-வீடியோ

    டெல்லி: சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதால் காஷ்மீர் மற்றும் இந்தியா நடுவேயான இணைப்பு ஒப்பந்தம் ரத்து ஆகாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

    1947களில் காஷ்மீர் மன்னர் ஹரி சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியாவுடன் இணைவதாக கையெழுத்திட்டார். அதனால் அவர் போட்ட ஒப்பந்தப்படி அப்போது காஷ்மீருக்கு என்று தனி சுயாட்சி அந்தஸ்து வழங்கவும் அங்குள்ள மக்களுக்கு அவர்களே சட்டம் இயற்றிக்கொள்ளவும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியல் சாசன அமர்வில் 370வது பிரிவு சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது.

    kashmir india agreement wont get lapse

    இந்த நிலையில் சட்ட பிரிவு 370 ரத்து செய்வதாக அமித் ஷா இன்று, நாடாளுமன்றத்தில், தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்ததற்கான ஒப்பந்தமே ரத்தாகிவிடும் என்றும் அவர்களை பேசினர்.

    இதுகுறித்து அமித்ஷா விளக்கம் அளித்தார். இந்தியா மற்றும் காஷ்மீர் ஆகியவை நடுவே ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்தாகும் என்ற எதிர்க்கட்சிகளின் பேச்சு உண்மைக்கு புறம்பானது. 1954 ஆம் ஆண்டு தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே இணைப்பு ஒப்பந்தத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    English summary
    kashmir india agreement wont get lapse, says amit shah in Parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X