ஏப்ரல் 9ல் கேரளா சட்டசபை தேர்தல். மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை.. அறிவித்த தேர்தல் ஆணையம்
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள அரசியல் நிலவரம் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்த கூட்டணி எல்டிஎப் என்று அழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பாஜக தனது செல்வாக்கை உயர்த்த போராடி வருகிறது.

கேரளாவை எடுத்து கொண்டால் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் டெல்லியில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கேரளாவுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அவர் அறிவித்தார்.
அதன்படி கேரளாவில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய மார்ச் 23ம் தேதி கசைடி நாளாகும். அதன்பிறகு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 26ம் தேதி கடைசி நாளாகும். பிறகு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று மே 4ம் தேதி ரிசல்ட் வெளியாக உள்ளது.
கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2வது முறையா வென்று ஆட்சியை தக்க வைத்தது. மீண்டும் பினராயி விஜயன் முதல்வரானார்.
அந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 61 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகள், கேரள காங்கிரஸ் (எம்) 5 தொகுதிகள், இந்திய சோசலிஸ்ட் ஜனதா தளம் தலா 2 தொகுதிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) கட்சி 2 தொகுதிகள், மற்றவர்கள் என்று மொத்தம் 95 இடங்களில் வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சிகளின் யுடிஎப் கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன்படி காங்கிரஸ் 21, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 15, கேரள காங்கிரஸ் 2, புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி 1, பிற கட்சிகள் 2 என்று மொத்தம் 41 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்கவில்லை.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications