18 உயிர்களை பறித்த.. சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்து! மேகாலயா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை தீவிரமாக கருதிய மேகாலயா உயர் நீதிமன்றம், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வெடி விபத்து நடைபெற்றபோது சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து பிடிஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த டிஜிபி ஐ. நோங்ராங், "சரியான எண்ணிக்கையை அறிய முடியவில்லை. மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது" என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் எச்.எஸ். தங்காங் மற்றும் டபிள்யூ. டியேங்டோ அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த இந்த வெடி விபத்து குறித்த, ஊடகச் செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், கடந்த ஜனவரி 14-ஆம் தேதியும் இதே போன்ற ஒரு விபத்து நடந்தும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவது கவலையளிக்கிறது. இத்தகைய செயல்களைத் தடுக்க அமலாக்க முகமைகள் தவறியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிமன்றம், கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுரங்க உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யவும், அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு முடிந்தவரை உடனடி உதவியும், மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், பிப்ரவரி 9 அன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பதையும் விளக்குமாறும் துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications