பாஜகவின் ‘ஆபரேஷன் 144’ - அமித்ஷா கேட்டு வாங்கிய ரிப்போர்ட்.. ‘அடுத்த குறி’.. அசரடிக்கும் வியூகம்!
டெல்லி : 2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை நேற்று குமரியில் தொடங்கிய நிலையில் தலைநகர் டெல்லியில் அமித்ஷா, நட்டா தலைமையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பாஜக நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், '144' தொகுதிகளைக் குறிவைத்து நடத்தும் ஆபரேஷன் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2019 தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொகுதிகளை அடையாளம் கண்ட பாஜக, அந்தத் தொகுதியில் இறங்கி வேலை செய்தால், 2024ல் '144உம் நமதே' எனக் கணக்குப் போட்டுள்ளது.
இதையொட்டியே, அந்த 144 எம்.பி தொகுதிகளுக்கு, மூன்று தொகுதிகளுக்கு ஒரு அமைச்சர் அல்லது மூத்த தலைவரை பொறுப்பாளராக நியமித்து ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட வியூகத்தை வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலை குறிவைத்து
2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேசியக் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் இறங்கியுள்ளன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் நோக்கில் நாடு முழுவதும் நடை பயணத்தைத் தொடங்கியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. நேற்று குமரியில் நடை பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, அடுத்த ஐந்து மாதங்களுக்கு இந்த 'பாரத் ஜோடோ யாத்திரை'யில் பிஸியாக இருக்கப் போகிறார். இந்த நடைபயணம் சுமார் 3500 கி.மீ தொலைவுக்கு நடைபெறுகிறது.

ஹாட்ரிக் அடிக்க
அதேநேரம், ஹாட்ரிக் வெற்றியைப் பெற பாஜக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஏற்கனவே பாஜக, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தலைக் குறிவைத்து ஆக்ஷனை தொடங்கிவிட்டது. பாஜகவின் மேலிட நிர்வாகிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். கடந்த முறையைப் போல பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. அதற்காக, ஏற்கனவே வென்ற தொகுதிகள் மட்டுமல்லாது வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளுக்கும் ஒரு புது ஆபரேஷனை செயல்படுத்துகிறது பாஜக.

டார்கெட் 144
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட தொகுதிகளைக் குறிவைத்து இறங்கியுள்ளது பாஜக. 2019 தேர்தலில் பல மாநிலங்களில் பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது. குறிப்பாக, மேற்கு வங்கம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட 144 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பாஜக நூலிழையில் தவறவிட்டது.

களத்தில் இறங்கி
இந்தத் தொகுதிகளை குறிவைத்து பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக. அதாவது, மூன்று தொகுதிகளுக்கு ஒரு மத்திய அமைச்சர் அல்லது மூத்த நிர்வாகி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்த பொறுப்பாளர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் சென்று தங்கி, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் உரையாடினர். சில வாரங்கள் நடந்த இந்த ஆய்வின் ரிப்போர்ட்டுகள் டெல்லி தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டன.

ரிப்போர்ட்
மேலிடம் நியமித்த பொறுப்பாளர்கள், அந்தத் தொகுதிகளின் கள நிலவரம், அங்கு தோல்விக்கான காரணம், அங்கு கட்சியை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள், திட்டங்கள் ஆகியவற்றை ரிப்போர்ட்டாக தயார் செய்து ஒப்படைத்த நிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.

வியூகம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், 144 தொகுதிகளில் 2024 தேர்தலில் வெற்றிபெற வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பொறுப்பாளர்கள் சமர்ப்பித்த தொகுதிகளின் ரிப்போர்ட் அடிப்படையில், அங்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வியூகம் அமைக்கவும் குழு அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்தகட்டம்
மேலும், வரும் 2024 லோக்சபா தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவின் பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை கண்டறிந்து வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்கெட்ச்
இந்தத் தொகுதிகளில் பூத் கமிட்டி மெம்பர்களை அதிகமாகச் சேர்க்கவும், அப்பகுதிகளில் செல்வாக்கு மிகுந்தவர்களையும், பாஜக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களையும் கட்சிக்குள் இழுத்து வேலைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ரிப்போர்ட் அடிப்படையில், விரிவான செயல் திட்டத்தை தயாரித்து வருவதாகவும், மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications