டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேச்சுவார்த்தை நடத்தலாம்.. திடீரென பின்வாங்கும் நேபாளம்.. இந்தியா கொடுத்த நெத்தியடி பதில்.. அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நேபாளத்தின் வெளியுறவுத்துறை தெரிவித்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை அதிரடி பதிலடி கொடுத்துள்ளது.

Recommended Video

    பேச்சுவார்த்தைக்கு அழைத்த நேபாளம்... இந்தியா கொடுத்த பதில்

    இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை பிரச்சனை முற்றி வருகிறது. நேபாளம் எல்லையில் இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா- நேபாள் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லையில் இருக்கும் லிபு லேக் பகுதியில் அமைந்து இருக்கும் சாலைதான் இதற்கு காரணம்.

    இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது. உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. இதை எதிர்த்து நேபாளம் குரல் கொடுத்தது.

    எல்லையை நெருங்கிய சீன ராணுவம்.. தயார் நிலையில் பீரங்கிகள்.. அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படம்எல்லையை நெருங்கிய சீன ராணுவம்.. தயார் நிலையில் பீரங்கிகள்.. அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படம்

    இதுதான் சண்டைக்கு காரணம்

    இதுதான் சண்டைக்கு காரணம்

    இந்த சாலை காரணமாக நேபாளம் இந்தியாவை கடுமையாக சீண்டி வருகிறது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது. லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. இது தொடர்பாக நேபாளம் அரசு மேப் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது . அதாவது இந்தியாவில் இருக்கும் பகுதிகளை நேபாளம் தனக்கு சொந்தமானது என்று மேப் வெளியிட்டுள்ளது.

    நேபாளம் தூது

    நேபாளம் தூது

    இந்த நிலையில் நேபாளம் அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கிறோம். எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க நினைக்கிறோம் என்று நேபாளம் கூறியுள்ளது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் நேபாளம் இப்படி தூது அனுப்பி உள்ளது. இந்த நிலையில் இந்தியா இதற்கு சிறப்பான பதிலடி கொடுத்துள்ளது.

    சட்டம் கொண்டு வந்தது

    சட்டம் கொண்டு வந்தது

    ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நேபாளம், இன்னொரு பக்கம் தங்களின் புதிய மேப் தொடர்பாக சட்டம் ஒன்றை கொண்டு வர முயன்று வருகிறது. நேபாளம் நாட்டின் வரைபடத்திற்கான அனுமதி மற்றும் அதற்கான சட்ட திருத்தம் இரண்டின் மீதான விவாதம் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வந்தது. இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

    இந்தியா பதிலடி

    இந்தியா பதிலடி

    அதாவது ஒரு பக்கம் இந்தியாவை நேபாளம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இன்னொரு பக்கம் தங்கள் நாட்டில் இந்தியாவை எதிர்க்கும் வகையில் புதிய வரைபடத்தை கொண்டு வரும் பணிகளை செய்து வருகிறது. எல்லை பிரச்சனையில் நேபாளம் இரட்டை வேடம் போட தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நேபாளத்தின் வெளியுறவுத்துறை தெரிவித்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை அதிரடி பதிலடி கொடுத்துள்ளது.

    என்ன பதில்

    என்ன பதில்

    அதில், அண்டை நாடுகளுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால் அண்டை நாடுகள் உண்மை மற்றும் நேர்மையுடன் செயல்பட வேண்டும். நம்பிக்கையை ஏற்படுத்திடும் வகையில் அவர்கள் செயல்பட வேண்டும். பேச்சுவார்த்தை என்பது பல நாள் நிகழ்வு. இதற்கான சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இதன் மூலம் நேபாளம் உடன் இந்திய பேச வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்கள்.

    English summary
    Trust is important: Nepal asks for talks, India replies in style.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X