Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீரவ் மோடிக்கு நெருக்கமான நபர் கைது... எகிப்தில் இருந்து மும்பை அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியின் வலதுகையாக கருதப்படும் சுபாஷ் சங்கர் பராப் எகிப்தில் கைது செய்யப்பட்டார். இவரை சிபிஐ அதிகாரிகள் மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்தியாவின் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி. குஜராத்தை சேர்ந்த இவர் வெளிநாடுகளில் இருந்து வைரம் இறக்குமதி செய்து பட்டைத்தீட்டி விற்பனை செய்து வந்தார்.

இவர் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வெளிநாடு சென்றார்.

நீரவ் மோடி மோசடி

நீரவ் மோடி மோசடி

அதாவது தொழிலுக்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்ற நிலையில் அதை நீரவ் மோடி திரும்ப செலுத்தவில்லை என்பது பிரதான குற்றச்சாட்டாகும். மேலும், வைர இறக்குமதி தொடர்பாக அவர் சுங்கவரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார். இதற்கிடையே அவர் வெளிநாடு தப்பித்து சென்றார். சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. வாரண்ட் பிறக்கப்பட்டும் பயன் அளிக்கவில்லை. இதனால் அவர் தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எகிப்தில் கைதான வலதுகை

எகிப்தில் கைதான வலதுகை

இந்நிலையில் தான் நீரவ்மோடிக்கு மிகவும் நெருக்கமான சுபாஷ் சங்கர் பராப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எகிப்து தலைநகர் கைரோவில் இருந்து அவரை இன்று சிபிஐ அதிகாரிகள் மும்பை அழைத்து வந்தனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ்மோடி ரூ.13,578 கோடி கடன் வாங்கிய விவகாரத்தில் அவரது வலதுகையாக சுபாஷ் சங்கர் பராப் செயல்பட்டுள்ளார். மேலும், நீரவ்மோடியின் பயர்ஸ்டார் டயமண்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த இயக்குனராக இவர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

2018 ல் தலைமறைவானவர்

2018 ல் தலைமறைவானவர்

நீரவ் மோடி, அவது உறவினர் மேகுல் சோக்சி ஆகியோர் குடும்பத்துடன் வெளிநாடு சென்ற நிலையில் 2018 ஜனவரியில் துபாய் மூலம் கைரோவுக்கு சுபாஷ் சங்கர் பராப் சென்றார். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி தற்போது கைது செய்தனர். மேலும் அவரை கைரோவில் இருந்து இன்று மும்பை அழைத்து வந்துள்ளனர்.

நாடு கடத்தும் நடவடிக்கை

நாடு கடத்தும் நடவடிக்கை

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகயைில், ‛நீரவ் மோடியுடன் நேரடி தொடர்பில் இவர் இருந்தார். மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளோம். முக்கிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது' என்றனர். இதற்கிடையே லண்டனில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் உள்ள நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+