ஜெனரல் நரவானே புத்தகத்தில் என்ன இருக்கு? பாதுகாப்பு துறை ஒப்புதல் தராத ஒரே புக்! வெடிக்கும் சர்ச்சை
டெல்லி: 2020 முதல் 2024 காலகட்டத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் 35 புத்தகங்களில், அனுமதி பெறாத ஒரே புத்தகமாக நரவானேவின் புத்தகம் இருக்கிறது. ராணுவ அதிகாரிகள் ஓய்வுக்குப் பிறகு எழுதும் புத்தகங்களுக்கு அனுமதி தேவைப்படும் நிலையில், நரவானே புத்தகத்திற்கு இதுவரை பாதுகாப்புத் துறை அனுமதி தரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாகப் பாதுகாப்புப் படைகளில் சேவை செய்த மூத்த அதிகாரிகள் புத்தகங்களை எழுதும்போது, அதை வெளியிடும் முன்பு மத்தியப் பாதுகாப்புத் துறையின் அனுமதி தேவை. அதில் தேசியப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே பாதுகாப்புத் துறை அதற்கான அனுமதியை வழங்கும்.

அனுமதி கோரி விண்ணப்பம்
இதனால் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தங்கள் புத்தகங்களின் நகல்களைப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பி அனுமதி கோரி விண்ணப்பிப்பார்கள். அதன்படி கடந்த 2020 முதல் பல்வேறு புத்தகங்கள் இதுபோல அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில் முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவானேவின் புத்தகத்திற்கு மட்டுமே இதுவரை அனுமதி கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
நரவானே புத்தகம்
முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவானேவின் "ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி" (Four Stars of Destiny) புத்தகம் மட்டுமே பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காத புத்தகமாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தப் புத்தகத்தில் இருக்கும் சில பாயிண்டுகளை தான் சுட்டிக்காட்ட விரும்பினார். இருப்பினும், சபாநாயகர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன் காரணமாகவே நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்காமல் முடங்க இதுவே காரணமா இருக்கிறது.
மொத்தம் 35 புத்தகங்கள்
2020 முதல் 2024 காலகட்டத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் 35 புத்தகங்களில், அனுமதி பெறாத ஒரே புத்தகமாக நரவானேவின் புத்தகம் இருக்கிறது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு முதலில் இது தொடர்பாக ஆர்டிஐ கோரி விண்ணப்பித்து இருந்தது. ஜனவரி 2024-ல் தாக்கல் செய்த RTI விண்ணப்பத்திற்கு, பாதுகாப்பு அமைச்சகம் செப்டம்பர் 17, 2024 அன்று பதிலளித்தது. அதன்படி, 2020 முதல் வந்த 35 புத்தகங்களில், ஜெனரல் நரவானேவின் நூல் உட்பட மூன்று மட்டுமே அப்போது அனுமதிக்கப்படாமல் இருந்தது..
இது தவிர பிரிகேடியர் ஜீவன் ராஜ்புரோஹித்தின் "லீடர்ஷிப் பியாண்ட் பேரக்ஸ்" (Leadership Beyond Barracks) பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜெனரல் என்.சி. விஜின் "அலோன் இன் தி ரிங்" (Alone in the Ring) மற்றும் நரவானே புத்தகம் ராணுவ பிரிவுக்கு அனுப்பப்பட்டு இருந்தாக தெரிவிக்கப்பட்டது. அதில் இப்போது வரை நரவானே புத்தகத்திற்கு மட்டுமே இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
யார் இந்த நரவானே
ஜெனரல் நரவானே 2019 முதல் 2022 வரை ராணுவத் தளபதியாகப் பதவி வகித்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் தான் சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் பதற்றங்கள் அதிகரித்தன. கல்வான் மோதலும் இந்தக் காலகட்டத்தில் தான் நடந்தது. இது தொடர்பாக அவர் எழுதிய சில கருத்துகளைத் தான் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குறிப்பிட முயன்றார்.
இப்போது வரை இந்தப் புத்தகம் வெளியாகாத நிலையில், இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகமோ அல்லது பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகமோ எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications