டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷாக்.. நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள்.. அதிர்ச்சியில் உறைந்துள்ள பீகார் கட்சிகள்

பீகாரில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாம்

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் தேர்தலில், நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பது அரசியல் கட்சிகளை கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

பீகார் சட்டசபை தேர்தலில் நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன.. அதில், நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியை தக்க வைத்துள்ள நிதிஷே, மறுபடியும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

243 இடங்களை கொண்ட அந்த சட்டசபையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 125 இடங்களும், எதிர்க்கட்சியினருக்கு 110 இடங்களும் கிடைத்துள்ளன! இதனிடையே பீகார் தேர்தல் புள்ளிவிவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

ஷாக்.. நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள்.. அதிர்ச்சியில் உறைந்துள்ள பீகார் கட்சிகள் ஷாக்.. நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள்.. அதிர்ச்சியில் உறைந்துள்ள பீகார் கட்சிகள்

வாக்கு

வாக்கு

அதில், பீகாரில் நடந்த 3 கட்ட தேர்தலில் 4 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.3 கோடி ஆகும். இதனடிப்படையில், பீகார் வாக்குப்பதிவு விகிதம் 57.09 சதவீதம் ஆகும். ஆனால், நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதுதான் அதிர வைத்து வருகிறது. எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்கும் வகையில் உள்ள நடைமுறைதான் நோட்டா.

நோட்டா

நோட்டா

இந்த நோட்டாவுக்கு 7 லட்சத்து 6 ஆயிரத்து 252 வாக்குகள் கிடைத்தள்ளன.. அதாவது இது 1.7 சதவீதம் ஆகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டாவுக்கு அதிகமாக வாக்கு கிடைத்துவிட்டடதுதான். இந்த தகவலை கேட்டு அங்குள்ள அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளதாம்.

பட்டன்

பட்டன்

நோட்டா நடைமுறை மின்னணு வாக்கு எந்திரங்களில் 2013 செப்டம்பர் மாதம்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும், அதே செப்டம்பரில் அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில்தான் மின்னணு வாக்கு மிஷின்களில் நோட்டா பட்டன் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பெல்லாம், எந்த வேட்பாளருக்கும் வாக்காளர் வாக்களிக்க இஷ்டம் இல்லையென்றால், 49-ஓ என்ற படிவத்தை வாக்குச்சாவடியில் நிரப்பி தர வேண்டும்..

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆனால் அப்படி தந்தாலும், அது வாக்களிக்கும் ரகசியத்தை வெளியிட்டு விடுவதாகவே இருந்தது.. ஆனால், இப்பாது பட்டன் சிஸ்டம் வந்துவிட்டதால், நோட்டா நடைமுறை மூலம் வாக்கு ரகசியம் காக்கப்படுகிறது. ஆனாலும், அந்த 7 லட்சத்து 6 ஆயிரத்து 252 பேருக்கு இந்த அரசியல் தலைவர்கள் மீது என்ன குறை என்றுதான் தெரியவில்லை.

English summary
Over 7 lakh Bihar voters opted for NOTA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X