"வேலை செய்ய முடியலேனா ரிசைன் பண்ணுங்க!" பிஎஸ்என்எல் அதிகாரிகளை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய அமைச்சர்
டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், டெலிகாம் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் போட்டிப்போட முடியவில்லை.
இதனால் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது.

எச்சரிக்கை
இதனிடையே பிஎஸ்என்எல் ஊழியர்கள் அலட்சியமான அணுகுமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்று அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார். 62,000 ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் நஷ்டத்தில் செயல்படுவதை ஏற்க முடியாது என்றும் சிறப்பாகச் செயல்படாத எவரும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், எம்என்டிஎல் நிறுவனத்தின் எதிர்காலம் கருதியே அதை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொடுத்த வேலையைச் செய்யுங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்க ரூ 1.64 லட்சம் கோடி மதிப்பிலான மறுமலர்ச்சி திட்டத்தைச் சமீபத்தில் அறிவித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், "உங்களிடம் கொடுக்கப்பட்ட வேலையை நீங்கள் ஒழுங்காகச் செய்யவேண்டும். இல்லையென்றால் கிளம்பத் தயாராக இருங்கள். இதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்.

கிளம்பி விடுங்கள்
இன்று முதல் இது தான் விதி. உங்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை என்றால் கிளம்பிவிடுங்கள். தனியார் நிறுவனங்கள் உடன் போட்டிப் போடும் அளவுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வேலை செய்ய முடியவில்லை என்றால் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு வீட்டுக்குப் போய்விடுங்கள். வேலையும் செய்யாமல் விருப்ப ஓய்வும் பெறாமல் இருந்தால் நாங்கள் 56Jஐ (முன்கூட்டியே ஓய்வு பெற வைக்கும் சட்டம்) பயன்படுத்துவோம்..

சுத்தம் கூட இல்லை
இதற்கு நீங்கள் தயாராக இருங்கள், ரயில்வே துறையில் இப்படித்தான் முறையாகச் செயல்படாமல் இருந்த 70 அதிகாரிகளை 56(ஜே) கீழ் கட்டாய ஓய்வு பெற வைத்தோம். எனவே, நடவடிக்கை எடுக்க மாட்டோம் என நினைக்காதீர்கள் நிர்வாகம் தான் மோசமாக உள்ளது என்றால் பிஎஸ்என்எல் அலுவலகங்கள் கூட சுத்தமாக இல்லை. பிஎஸ்என்எல் அலுவலகங்களில் இருக்கும் அசுத்தத்தைக் கண்டு நான் வெட்கப்பட்டேன். இதுபோன்ற மோசமான பராமரிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது.

பெரிய ரிஸ்க்
திரும்பவும் சொல்கிறேன், உரிய நடவடிக்கை எடுத்து உங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் நிச்சயம் நடவடிக்கை பாயும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு உதவ மற்றொரு உதவி திட்டத்தை அறிவித்து மிகப் பெரிய ரிஸ்க்கை அரசு எடுத்துள்ளது. அனைத்து ஊழியர்களின் செயல்பாடுகளும் மாதம் ஒரு முறை ஆய்வு செய்யப்படும். நாம் என்ன ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் காக்க வேண்டும். இங்குள்ள 62 ஆயிரம் ஊழியர்களும் அதே அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.

இரவு பகல்
விரைவில் 4ஜி தொழில்நுட்பத்தை லான்ச் செய்ய வேண்டும். அதன் பின்னர் சீக்கிரமே 5ஜியை லான்ச் செய்ய வேண்டும். எனக்கு அடுத்து 24 மாதங்களில் மாற்றம் தெரிய வேண்டும். இரவு பகல் பார்க்காமல் வேலை செய்யுங்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்கு நல்ல முடிவுகள் தேவை அவ்வளவுதான்" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications