இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு, வர்த்தகத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்திக்கும் மோடி, இருதரப்பு பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்காவும், அத்துடன் சேர்ந்து இஸ்ரேலும் தாக்குதல் நடத்தக்கூடும். இந்த பதற்றத்திற்கு நடுவில்தான் தற்போது பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இது பிரதமரின் இஸ்ரேலுக்கான இரண்டாவது பயணம் என்று வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது. "இப்பயணத்தின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் சந்திப்பார். இந்தியா-இஸ்ரேல் ராஜதந்திர உறவு மூலம் பெற்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு தலைவர்களும் மறுபரிசீலனை செய்வார்கள். அத்துடன், அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, விவசாயம், நீர் மேலாண்மை, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் போன்ற பல துறைகளில் மேலும் பல ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் விவாதிப்பார்கள்" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான, நீண்டகால உறவை இந்த அரசுமுறைப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், உலகளாவிய விஷயங்கள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்துப் பேசுவார். அதே நாளில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனிப்பட்ட இரவு விருந்தில் பங்கேற்பதுடன், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.
நாளை, இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அத்துடன், ஹோலோகாஸ்ட் நினைவுச் சின்னமான யாட் வாஷெமையும் பிரதமர் மோடி பார்வையிடுவார். இஸ்ரேலில் தங்கியிருக்கும்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார். மேலும், ஒரு தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியையும் பார்வையிட உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இதற்கு முன்பு அவர் ஜூலை 2017-ல் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications