Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொட்டிக்கிடக்கும் வேலை.. பிஇ முதல் ஐடிஐ படித்தவர்களை அழைக்கும் டிஆர்டிஓ நிறுவனம்.. நல்ல வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் டிஆர்டிஓவின் பிஎக்ஸ்இ நிறுவனத்தில் ஏரளாமான பணிபயிடங்கள் ஊக்கத்தொகையுடன் நிரப்பப்பட உள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் Defence Research And Development Organisation (DRDO) எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இது இந்திய விண்வெளித்துறை மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்களின் உற்பத்திகளை செய்து வழங்கி வருகிறது இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது.

PXE Under DRDO job recruitment 2022

இந்நிலையில் டிஆர்டிஓவின் கீழ் ஒடிா மாநிலம் சண்டிப்பூரில் Proof and Experimental Establishment (PXE) செயல்பட்டு வருகிறது. இங்கு டிஆர்டிஓ தளவாட பொருட்களின் சோதனை மற்றும் மதிப்பீடு செய்யப்படுகிறது. இங்கு ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Graduate Apprentice, Technical Apprentice மற்றும் Trade Apprentice என 3 பிரிவில் மொத்தம் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Graduate Apprentice பணியில் 9 இடங்கள், Technical Apprentice பணியி்ல 42 இடங்கள், Trade Apprentice பணிக்கு 22 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதில் Graduate Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிஇ படிப்பையும், Technical Apprentice பணிக்கு விண்ணப்பிப்போர் டிப்ளமோ படிப்பையும், Trade Apprentice பணிக்கு விண்ணப்பிப்போர் ஐடிஐ படிப்பையும் முடித்திருக்க வேண்டும். Graduate Apprentice பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.9 ஆயிரம், Technician Apprentice பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.8 ஆயிரமும், Trade Apprentice பணிக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7,700 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.drdo.gov.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து போட்டோ மற்றும் உரிய ஆவணங்களோடு இணைத்து பிஎடிஎப் பைலாக [email protected] எனும் மெயிலுக்கு செப்டம்பர் மாதம் 2ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களின் விண்ணப்பத்தாரர்கள் தங்கள் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஷாட்லிஸ்ட் செய்யப்பட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கும் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி அடைவோருக்கு பணி ஆணை வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+