வயதான பெற்றோரை கவனிக்க 45 நாள் விடுப்பு? அரசு - தனியார் நிறுவனங்களில் அமல்? ராஜ்யசபா எம்பி பேச்சு
டெல்லி: வயதான பெற்றோர்களை கவனித்து கொள்வதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்பணியாற்றும் ஊழியர்களுக்கு 45 நாள் விடுமுறை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்யபசாவில் எம்பி கோரிக்கை வைத்து பேசினார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்பி சுமித்ரா பால்மிக். நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு அவர் வைத்த முக்கிய கோரிக்கை அனைவரையும் கவர்ந்துள்ளது.

குறிப்பாக அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது சுமித்ரா பால்மிக் மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்தார்.
பெற்றோரை கவனிக்கும் பொறுப்பு
இதுபற்றி அவர், ‛‛"பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால், நான் இன்னொரு விஷயத்தை சொல்ல வேண்டிய நேரம் இது. தங்கள் தொழில் பொறுப்புகளுடன் முதிய பெற்றோர்களையும் கவனிக்கும் பொறுப்பை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.
45 நாள் கட்டாய விடுமுறை
2026ல் இந்தியா அதிக இளைஞர் சக்தியை கொண்டிருந்தாலும், முதியர்களின் எண்ணிக்கை 14.9 கோடியைத் தாண்டிவிட்டது. 2036-க்குள் இவர்களின் எண்ணிக்கை 23 கோடியை மிஞ்சும். விரைவில் 3ல் ஒருவர் முதியவராக இருப்பார். 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்களை பராமரிக்க, அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு 45 நாட்கள் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும்.
விடுப்பு கிடைப்பது இல்லை
வேகமான நகரமயமாக்கல், வேலை வாய்ப்புகள் கோடிக்கணக்கான இளைஞர்களை தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றி, பெற்றோர்களை தனித்து விடுகின்றன. முதியவர்கள் மருத்துவப் பராமரிப்புக்காக மகன் அல்லது மகளின் உடனிருப்பை எதிர்பார்க்கின்றனர். ஆனால், அலுவலகத்தில் விடுப்பு எடுக்க அவர்கள் சிரமப்படுவதுடன், விடுப்பும் கிடைப்பதில்லை.
மத்திய அரசுக்கு கோரிக்கை
இதனால் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோரை கவனித்துக்கொள்ள 45 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்று நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு தாய் தன் குழந்தையை 20 வருடம் வரை பராமரிக்கிறார். அதேபோல் ஒரு மகன்/மகளும் நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்'' என்று கூறினார்.
மத்திய அரசு முடிவு என்ன?
இவர் இப்படி கூறியிருந்தாலும் கூட மத்திய அரசு சார்பில் இன்னும் பதிலளிக்கவில்லை. தற்போது மகன், மகள்கள் என்று அனைவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் அவர்களால் வீட்டில் உள்ள தங்களின் பெற்றோர்களை கவனிக்க முடியாத நிலை உள்ளது. இப்படியான சூழலில் தான் இந்த கோரிக்கைை ராஜ்யசபா எம்பி சுமித்ரா பால்மிக் வைத்துள்ளார். இவரது இந்த கோரிக்கயை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications