மொத்த பணமும் ரிடர்ன்.. இலவச விமான டிக்கெட்! இந்திய பயணிகளுக்கு “குட் நியூஸ்”! வரும் சூப்பர் சட்டம்
டெல்லி: விமான பயணம் மேற்கொள்ளும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், விமான போக்குவரத்தை அதிகரிக்கும் விதமாகவும் விமான பணிகளுக்கான பல்வேறு விதிகளில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்து உள்ளது டிஜிசிஏ எனப்படும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம். கடைசி நேரத்தில் விமான வகுப்புகள் பயணிகளின் விருப்பம் இன்றி குறைப்பது, விமான சேவை ரத்து, தாமதமான விமான சேவைகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவது போன்றவற்றை தவிர்க்க இதுபோன்ற விதிகளை கொண்டு வருவதாக அறிவித்து உள்ளது டிஜிசிஏ.
பெருமளவில் சிவில் விமான போக்குவரத்தையும், ஏராளமான விமான நிலையங்களையும் கொண்டு இருக்கும் இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்தை முறைபடுத்தி வருகிறது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்.
இந்நிலையில் தற்போது இந்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விமான டிக்கெட் புக்கிங் விதிகளில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல்வேறு புதிய மாற்றங்களை அமல்படுத்த இருக்கிறது.

வகுப்பு மாற்றம்
போக்குவரத்து விமானங்களில் பயணிகள் புக்கிங் செய்திருக்கும் உயர் வகுப்புகளில் இருந்து கடைசி நேரத்தில் குறைவான கிளாஸ்களுக்கு மாற்றம் செய்யப்பட்டால் இதற்கு முன் எந்த கட்டண சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. பல விமான பயணிகளுக்கு இது ஒரு மோசமான அனுபவமாகவே இருந்து இருக்கும்.

பணத்தை திரும்ப பெறலாம்
இந்த நிலையில் இனி இதுபோல் வகுப்புகள் வாடிக்கையாளர் விருப்பம் இன்றி குறைக்கப்பட்டால், மொத்த டிக்கெட் பணத்தையும் வரியோடு பயணிகள் திரும்பி பெற்றுக்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முடிவு செய்து இருக்கிறது. அதேபோல் சம்பந்தப்பட்ட பயணிகளை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், இலவசமாக அடுத்த விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும் என சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

பயணிகள் நலன் கருதி
விமான பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், வகுப்புகளை குறைப்பதன் காரணமாகவும் பயணிகளுக்கு ஏற்படும் தாக்கத்தை உணரும் வகையில் இந்த விதிகள் அமைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து டிஜிசிஏ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.

மக்களும் மாற்றுகிறார்கள்
இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், "அதேபோல் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் பயணிகளே சில சமயங்களில் விமான வகுப்புகளை குறைத்துக்கொள்வதை அரசாங்கம் கவனித்து உள்ளது." என்றார். விமான பயணிகள் தொடக்கத்தில் பிசினஸ், ப்ரீமியம் எகனாமி வகுப்புகளில் விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்து கொள்கிறார்கள்.

மாற்றுவது ஏன்?
ஆனால், செக் இன் செய்யும்போது அவர்கள் தங்களின் வகுப்புகளை குறைத்துக்கொள்வதும் வழக்கமாக உள்ளது. விமானங்களின் மாற்றம், அதிகளவிலான முன்பதிவு, நிரம்பாத காலி இருக்கைகள் போன்றவை இதற்கு காரணமாக உள்ளது. இதுபோன்ற சிக்கல்களை களைவதற்காகவும், விமான சேவை ரத்து, போர்டிங் செய்ய அனுமதி மறுப்பு, தாமதமான விமான சேவைகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு உதவ டிஜிசிஏ விதிகளில் மாற்றம் செய்கிறது.

பயணிகளுக்கு குட் நியூஸ்
டிஜிசிஏ கொண்டு வந்த இந்த விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பயணிகளின் ஒப்புதல் இன்றி அவர்களின் வகுப்புகள் குறைக்கப்பட்டால், அவர்கள் எடுத்த விமான டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அடுத்த விமானத்தில் அவர்களை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அழைத்து செல்ல வேண்டும். பங்குதாரர்களின் கருத்துகளை கேட்பதற்கு திருத்தப்பட்ட மசோதாவை முன்கூட்டியே தெரிவிப்பதாகவும், அதில் தேவையான திருத்தங்களை மேற்கொண்ட பிறகு இறுதியான சட்டம் தயாரிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளார்கள்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications