Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை பொருளாதார நெருக்கடி! தேயிலை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்! நிபுணர்கள் கூறுவது என்ன!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பிற நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய தேயிலை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ஷ்டமாக மாறலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இலங்கையில் தேயிலை ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறை சார்ந்த வருமானங்கள் தான் அந்நாட்டுக்கு பிரதானமாக வருவாயாக உள்ளன. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கமால் சுற்றுலா வருமானம் முடங்கியது.

இதனால் இலங்கை அதிகளவில் கடன் வாங்கியது. மேலும் கையிருப்பு அந்நிய செலாவணியும் கரைந்து போக தற்போது அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேயிலை உற்பத்தி

இலங்கையின் தேயிலை உற்பத்தி

இந்நிலையில் தான் தேயிலை உற்பத்தியும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதாவது உலக தேயிலை சந்தையில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கை ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்கிறது. இலங்கை தனது தேயிலை உற்பத்தியில் 97 முதல் 98 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது என ஐசிஆர்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் கவுசிக் தாஸ் கூறியுள்ளார்.

தேயிலை உற்பத்தி பாதிப்பு

தேயிலை உற்பத்தி பாதிப்பு

இலங்கை மரபுவழி தேயிலையின் மொத்த உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளாக ஈராக், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபியா, துருக்கி ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் அதிகநேர மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டர்களை இயக்கவும் போதுமான அளவில் எரிபொருள் இல்லை. இதனால் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது.

இந்தியாவுக்கு வாய்ப்பு

இந்தியாவுக்கு வாய்ப்பு

இதுபற்றி ஐசிஆர்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் கவுசிக் தாஸ் கூறுகையில், ‛‛இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தேயிலை தொழிற்சாலைகள் நடத்த முடியாத நிலையில் உள்ளன. இலங்கையின் தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவிலான வீழ்ச்சி என்பது உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்பாக அமையும்'' என்றார்.

இலங்கையில் தரம் குறைய வாய்ப்பு

இலங்கையில் தரம் குறைய வாய்ப்பு

இதுபற்றி இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சமீபத்தில் திரும்பிய தென்னிந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தீபக் ஷா கூறுகையில், ‛‛இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 12-13 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. ஜெனரேட்டர்களை இயக்கவும் போதிய அளவில் எரிபொருள் இல்லை. தேயிலை உற்பத்தி செயல்பாட்டில் ஏற்படும் இடையூறுகள் தரத்தை குறைக்க வழிவகுக்கும். இது பிரச்சனையாக உள்ளது. மேலும் உற்பத்தியும் குறைந்துள்ளது.

இந்தியாவுக்கு கூடுதல் பலன்

இந்தியாவுக்கு கூடுதல் பலன்

இலங்கையில் 20 முதல் 25 சதவீத தேயிலை உற்பத்தி குறையலாம் என்று நான் நினைக்கிறேன். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். குறிப்பாக ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி வர்த்தம் ரூபாய்-ரூபிள் செலுத்தும் வழிமுறையுடன் பின்பற்றப்பட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். உலகில் இலங்கை தேயிலை பற்றாக்குறை என்பது இந்தியாவின் தேயிலை தேவையை அதிகரிக்கலாம்'' என்றார்.

ரஷ்யாவில் மவுசு

ரஷ்யாவில் மவுசு

இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஷுமன் கனோரியா கூறுகையில், ‛‛இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக இந்த ஆண்டு 15 சதவீதம் விளைச்சல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரங்கள், டீசல் பற்றாக்குறை யால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும். இலங்கை தேயிலையை விரும்புவோர் தற்போது நிலவும் தட்டுப்பாட்டால் ஒரு சென்ட் அளவுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை அதிகம் கொடுத்து வாங்குவதை பார்க்க முடிகிறது. ரஷ்யாவில் இந்தியா, இலங்கை மரபுவழி தேயிலைக்கு நல்ல மவுசு உள்ளன.

3 வாரமாக பயன்

3 வாரமாக பயன்

ஒட்டுமொத்தமாக இலங்கை தேயிலை தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக கடந்த மூன்று வாரங்களில் தென்னிந்தியா ஓரளவுக்கு பயனடைந்துள்ளது. ஆனால் இலங்கையை பயன்படுத்தும் சர்வதேச விற்பனையாளர்கள் உடனடியாக இந்தியா பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பு குறைவு'' என்றார்.

இந்தியாவில் 90 சதவீதம்

இந்தியாவில் 90 சதவீதம்

இலங்கையைத் தவிர, சீனா, வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகியவை மரபுவழி தேயிலையை உற்பத்தி செய்கின்றன. இதை சீனா அதிகளவில் ஏற்றுமதி செய்வது இல்லை. இந்தியா சுமார் 110 மில்லியன் கிலோ மரபுவழி தேயிலையை உற்பத்தி செய்கிறது. இதில் 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த அளவு இன்னும் அதிகரிக்கலாம். இருப்பினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவின் அஸாம், பெங்கால் தேயிலை உற்பத்தியாளர்களை விட தென்இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்பெறலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+