கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே தனி விமானத்தில் தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு புறப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு 2 முறை சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி 12, 19 ஆம் தேதி டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராகினார். அவரிடம் தொடர்ந்து பல மணி நேர விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு மார்ச் 10 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தவெக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தவிருந்த நிலையில், அவர் டெல்லி செல்வில்லை.
சென்னையில் ஆஜராக அனுமதி கோரியதை சிபிஐ நிராகரித்தது. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பணிகள் இருப்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜய் சார்பில் கோரிய நிலையில், மார்ச் 15 ஆம் தேதியான நாளை விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ புதிய சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார். இதற்காக ஒருநாள் முன்னதாகவே தற்போது தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுள்ளார். அவருடன் நிர்மல் குமார் உள்ளிட்ட 7 பேர் உடன் சென்றுள்ளனர்.
கூட்டணிக்கு பாஜக அழைத்து வரும் நிலையில், விஜயின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து தவெக தலைவர் விஜயை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சித்து வரும் நிலையில், விஜயின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications