Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறுப்பு வன்முறை அதிகரிக்கிறது.. மவுனத்தை கலைங்க பிரதமர் மோடி! சிவசங்கர் மேனன் உட்பட 108 பேர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛ நாட்டில் சமீபத்தில் நடைபெற்று வரும் வகுப்புவாத வன்முறைகளுக்கும், வெறுப்பு அரசியலுக்கும் உங்கள் மவுனத்தை கலைத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் உள்பட 108 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ராமநவமி ஊர்வலம், அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது சில இடங்களில் இருதரப்பு மோதல்கள் ஏற்பட்டு வன்முறைகள் வெடித்தன. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

சில இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அஸாம், ஜார்கண்ட் உள்பட பல மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவியது. மத்திய பிரதேசம், டெல்லி ஜஹாங்கிர்புரியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டியாக முஸ்லிம்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

108 அதிகாரிகள் கடிதம்

108 அதிகாரிகள் கடிதம்

இந்நிலையில் தான் இந்தியாவில் உயர் பதவிகளில் இருந்த 108 அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை, டெல்லி முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டிகேஏ நாயர் உள்பட 108 பேர் கையெழுத்திட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அமைதி அச்சுறுத்தலை அதிகப்படுத்தும்

அமைதி அச்சுறுத்தலை அதிகப்படுத்தும்

இந்தியாவில் நாம் இதற்கு முன்பு இல்லாத அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம். இதன்மூலம் அரசியலமைப்பு மட்டுமின்றி இந்தியாவின் தனித்துவமான சமுதாயமும் ஆபத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் மிகப்பெரிய நாகரீகத்தின்படி அமைக்கப்பட்ட அரசியலமைப்பு கிழிக்கப்பட வாய்ப்புள்ளது. உங்கள் அமைதி நாட்டின் சமூக அச்சுறுத்தலை இன்னும் அதிகப்படுத்திவிடும். இதனால் மவுனம் கலைத்து தீர்வு காண வேண்டும்.

பாஜக வெறுப்பு அரசியலுக்கு முடிவு

பாஜக வெறுப்பு அரசியலுக்கு முடிவு

உங்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் மிகவும் ஆர்வத்துடன் வெறுப்பு அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். நாங்கள் ஒருபோதும் இத்தகைய கருத்துகளை வெளியிட விரும்புவது இல்லை. ஆனால் அரசியலமைப்பு நிறுவனங்களை அழிக்கும் நோக்கிலான இடைவிடாத வேகம் எங்கள் கோபத்தையும், வேதனையையும் வெளிக்காட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளது.

 பாஜக மாநிலங்களில் வன்முறை

பாஜக மாநிலங்களில் வன்முறை

கடந்த சில ஆண்டுகளாக அஸாம், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வன்முறைகள் அதிகரித்துள்ளன. பாஜக ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், டெல்லியிலும் (டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் போலீஸ் துறை) இப்பிரச்சனைகள் புதிய பரிமாணத்தை பெற்றுள்ளன.

சிறுபான்மையினருக்கு நிரந்தர அச்சம்

சிறுபான்மையினருக்கு நிரந்தர அச்சம்

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பும், தீங்கு செய்யும் மனப்பான்மையும் மாநிலங்களில் உள்ள கட்டமைப்புகள், நிறுவனங்கள், நிர்வாக செயல்முறைகளில் ஆழமாக பதிந்துள்ளது வருத்தமளிக்கிறது. பாஜக ஆட்சி என்பது சட்ட நிர்வாகம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கான கருவியாக இருப்பதற்குப் பதிலாக சிறுபான்மையினரை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்கும் வழிமுறையாக மாறியுள்ளது. இது கவலையளிக்கிறது.

சாத்தியக்கூறுகள் அதிகரிப்பு

சாத்தியக்கூறுகள் அதிகரிப்பு

சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் ஏழைகளை வெறுப்பின் இலக்குகளாக மாற்றி அவர்களின் அடிப்படை உரிமைகளை தெரிந்தே பறிக்கும் ஒரு நாடாக நாம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது அச்சம் ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ளன. இதனால் தான் நிர்வாக அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் உருவமாக புல்டோசர் அரசியல் முறை மாறியிருப்பது ஆச்சரியமளிக்கவில்லை.

பாஜகவினருக்கு அறிவுரை

பாஜகவினருக்கு அறிவுரை

சரியான செயல்முறை, சட்டத்தின் ஆட்சி எனும் கருத்துக்கள் தகர்ப்பட்டதால் தான் டெல்லி ஜஹாங்கிர்புரியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் மவுனத்தை கலைத்து வெறுப்பு அரசியலுக்கு தீர்வு காண உங்கள் கட்சியினருக்கு அறிவுரை வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+