பழனியை தலைமையிடமாக்க கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
திண்டுக்கல்: அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் பிரசார களம் அனல் பறக்கிறது. இன்று கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர் சட்டசபை தொகுதிகளின் அதிமுக- பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம் செய்தார்.

பின்னர் பழனியில் பிரசாரம் மேற்கொண்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பழனி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்றார்.
ஏற்கனவே ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.