போலீஸை நோக்கி வந்த அரிவாள்.. விக்னு முட்டியில் சுட்ட டிஎஸ்பி! வீடு வீடாக அலசும் போலீஸ்! என்ன காரணம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மூன்று நாட்களில் இரண்டு கொலை ஒரு கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள குற்றவாளிகளை தேடி தேடி கைது செய்து வருகின்றனர் திண்டுக்கல் போலீசார். இந்த நிலையில், திண்டுக்கல்லில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரை கைது செய்ய சென்ற எஸ்ஐ-ஐஅறிவாளால் வெட்டியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த குற்றவாளியை சுட்டு பிடித்துள்ளனர் திண்டுக்கல் நகர் காவல் துறையினர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்தவன் விக்ணு (எ)விக்னேஸ் இவன் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விக்னேஸ் மேலும் ஒருவரை கொலை செய்வதற்கு தயாராகி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சவேரியார் பாளையம் அருகே உள்ள சிகேசிஎம் காலனியில் உள்ள வீட்டிற்கு இன்று மாலை திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார் சென்றனர். அப்பொழுது போலீசார் உடன் வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

திண்டுக்கல் துப்பாக்கி சூடு
மேலும் வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்ஐ ஜான்சனை இடது கையில் வெட்டி உள்ளான். அப்பொழுது டிஎஸ்பி கார்த்திக் தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் விக்னேஸ் வலது காலில் முட்டியில் சுட்டுள்ளார். குற்றவாளி விக்னேஸ் மயங்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த எஸ்ஐ ஜான்சன் மற்றும் விக்னேஸ் ஆகிய இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்பொழுது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பட்டி விக்னேஸ்
தற்போது போலீசாரால் சுடப்பட்டுள்ள விக்னு என்ற விக்னேஷ்வரன் மீது ஏற்கனவே சொன்னது போல பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே நேரத்தில் கணக்கு காட்டுவதற்காக போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருந்தாலும், பழைய குற்றவாளிகளை தேடி தேடி கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இன்று மட்டும் திண்டுக்கல் நகர் மற்றும் தாலுகா உள்ளிட்ட காவல் நிலைய பகுதிகளில் இருக்கும் முன்னாள் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளை போலீசார் வீட்டிற்குள் சென்று கைது செய்ததாக சொல்லப்படுகிறது.
போலீஸ் நடவடிக்கை
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் விக்னு என்ற விக்னேஸ்வரன் ஏற்கனவே தன்மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி தற்கொலைக்கு முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டின் ஏதாவது ஒரு மாதத்தில் திண்டுக்கல்லில் திடீர் திடீரென கொலை சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொலை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் இதே போல் தான் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
கொலை நகராகும் திண்டுக்கல்
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேசுராஜ் என்பவரும் அவரது மனைவியும் ஒரே நேரத்தில் மிகக் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதேபோல் இன்று திண்டுக்கல் மீன் மார்க்கெட் பகுதியில் கொலை முயற்சி சம்பவம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட மாயாண்டி ஜோசப் என்பவரின் கொலைக்கு பலியாக இந்த கொலை நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்துதான் திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்திய குற்றவாளிகள், முன்னாள் குற்றவாளிகளை கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications