Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளு குளு பிரதேசத்திலிருந்து சூடான செய்தி..தமிழ்நாட்டில் முதல்முறையாக கொடைக்கானலில் சதமடித்த டீசல்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கொடைக்கானலில் டீசல் விலை ரூ.100-ஐ கடந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தினசரி பைசா கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்கள் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தன.

இதனிடையே 10 நாட்களாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை அவதியடைய செய்து இருக்கிறது.

137 நாட்கள் உயராத விலை

137 நாட்கள் உயராத விலை

கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.101.81 மற்றும் டீசல் விலை ரூ.91.88 ஆகவும் இருந்தன. 137 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி நீடித்து வந்த இந்த விலை, கடந்த மார்ச் 22 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டன.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.106.69 ஆகவும் டீசல் விலை ரூ.96.76 ஆகவும் இருந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45 ஆகவும், டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.97.52 ஆகவும் உள்ளது.

10 நாட்களில் எவ்வளவு விலை உயர்வு?

10 நாட்களில் எவ்வளவு விலை உயர்வு?

சென்னையில் இதுவரை விற்பனையான பெட்ரோல், டீசல் விலையிலேயே இதுதான் உச்சபட்சம் என்று கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.6.05 காசுகளும் டீசல் விலை ரூ.6.09 காசுகளும் உயர்ந்துள்ளன.

கொடைக்கானலில் சதமடித்த டீசல்

கொடைக்கானலில் சதமடித்த டீசல்

இதனிடையே தமிழ்நாட்டில் முதல்முறையாக கொடைக்கானலில் டீசல் விலை ரூ.100 ஐ தாண்டி இருக்கிறது. அங்கு ஒரு லிட்டர் டீசல் ரூ.100.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொடைக்கானலில் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ.110.32 ஆக அதிகரித்துள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+