துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தேச துரோகி”.. துபாயில் கத்திய நபர்! உடனே நின்ற அர்ஷ்தீப் சிங் - வெளுத்து வாங்கிய பத்திரிகையாளர்

Google Oneindia Tamil News

துபாய்: இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் முன்பாகவே அவரை துரோகி என்று திட்டிய நபரை இந்திய பத்திரிகையாளர் ஒருவர் சத்தம் போட்டு அதிகாரிகள் துணையோடு அங்கிருந்து விரட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தது இந்தியா.

2 வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணி வெற்றியை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

மேஜர் சிக்கல்! ரொம்ப கஷ்டமான முடிவுதான்! இந்திய அணிக்கு தேவையான மாற்றம்! மேஜர் சிக்கல்! ரொம்ப கஷ்டமான முடிவுதான்! இந்திய அணிக்கு தேவையான மாற்றம்!

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்று இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொண்டது இந்திய அணி. அதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது இந்தியா.

இலங்கையிடம் தோல்வி

இலங்கையிடம் தோல்வி

இந்த நிலையில் நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடியது. டாஸ் வென்று பந்துவீச்சை இலங்கை அணி தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி, இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங்

இந்த போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 40 ரன்களை விட்டுக்கொடுத்ததார். இதற்கு முந்தைய பாகிஸ்தான் போட்டியில் ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இதனால் ஆத்திரத்தில் ரோகித் சர்மா மைதானத்திலேயே அவரை நோக்கி கத்தினார். இதையடுத்து ரசிகர்கள் என கூறிக்கொள்ளும் மதவெறியர்கள் அர்ஷ்தீப் சிங்கின் மதத்தை வைத்து அவரை காலிஸ்தானி என காட்டமாக விமர்சித்தனர்.

துரோகி என கோஷம்

துரோகி என கோஷம்


இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்து மைதானத்திலிருந்து வந்து பேருந்தில் ஏற சென்ற அர்ஷ்தீப் சிங்கை நோக்கி அங்கு நின்ற ஒரு நபர் துரோகி என்று கத்தினார். இதனை கேட்ட அர்ஷ்தீப் சின் பேருந்தில் ஏறாமல் சில நொடிகள் நின்றார். அதன் பின்னர் பிரச்சனை செய்ய வேண்டாம் என அவர் உள்ளே சென்றுவிட்டார். இதனை கவனித்த பத்திரிகையாளர் ஒருவர் சத்தமிட்ட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிகளை அழைத்து அங்கிருந்து விரட்டினார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Fan shouted Arshdeep Singh a Traitor after Asia Cup match: இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் முன்பாகவே அவரை துரோகி என்று திட்டிய நபரை இந்திய பத்திரிகையாளர் ஒருவர் சத்தம் போட்டு அதிகாரிகள் துணையோடு அங்கிருந்து விரட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X