Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோஹித்-ராகுல் அதிரடி சரவெடி ஜோடி... இருவரும் புரிந்துக்கொண்டு விளையாடினோம்.. ராகுல் பேட்டி

Subscribe to Oneindia Tamil

ஆப்கனுக்கு எதிராக அதிரடி சரவெடி ஆட்டத்தால் நோ லாஸில் 140 ரன்களை குவித்த ராகுல்-ரோகித் ஜோடி பெருத்த எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது. இதன்மூலம் மீண்டும் இருவரும் வலுவான ஜோடி என நிரூபித்துள்ளனர். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு ஆடியதால் சிறப்பாக ஆடமுடிந்தது என கே.எல்.ராகுல் பேட்டி அளித்துள்ளார்.

வெளுத்து வாங்கிய இந்தியா

வெளுத்து வாங்கிய இந்தியா

இந்தியா டாஸில் தோற்றதால் டாஸில் வென்ற ஆப்கன் பேட்டிங்கை இந்தியாவுக்கு ஒதுக்கியது. முதலில் பேட்டின் செய்த இந்தியா ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. பவர்பிளேயில் இதுவரை இல்லாத அளவு ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து 53 ரன்களை எடுத்தனர்.

12வது ஓவரில், ரோஹித் ஷர்மா தனது அரை சதத்தை எட்டினார், பின்னர் அதே ஓவரில் கேஎல் ராகுல் சிக்ஸரை விளாசினார், இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர்.

140 ரன்கள் நோ லாஸ்

140 ரன்கள் நோ லாஸ்

15 ஓவர் வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 15வது ஓவரில் ரோஹித் ஷர்மாவை கரீம் ஜனத் வெளியேற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் இறுதியாக நிம்மதி பெருமூச்சு விட்டனர், அதைத் தொடர்ந்து 17வது ஓவரில் கே.எல்.ராகுலின் விக்கெட்டை நயீப் வீழ்த்தினார். தொடக்க வீரர்கள் 140 ரன்கள் சேர்த்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களில், ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி 35 ரன்கள் குவித்ததால், கேர்பேஜ் தொடர்ந்தது மற்றும் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணியை 210 ரன்களுக்கு கொண்டு வந்தது.

ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டோம்

ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டோம்

யாராக இருந்தாலும் அடிப்பது என முடிவு செய்தோம்-ராகுல் இமாலய ரன் குவிப்பிற்கு பிறகு வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

"கடந்த மூன்று ஆட்டங்களில் நாங்கள் ஆடியதில் சிறந்த ஆட்டம் இது. தொடக்க ஆட்டக்காரர்கள் உறுதியான அடித்தளம் கொடுத்தால் ஆட்டம் சிறப்பாக இருக்கும், அதைத்தான் நானும் ரோஹித்தும் செய்ய முயற்சித்தோம். எனது பேட்டிங் செயல் திறன் அதிகரித்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

ராகுல்

ராகுல்

நீண்ட நேரம் நாங்கள் ஒன்றாக விளையாடினோம். ஒன்றாக, விக்கெட்டுகளுக்கு இடையே ஓடினாலும், நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறோம், என்று ராகுல் இன்னிங்ஸுக்குப் பிந்தைய உரையாடலில் கூறினார்.

"நான் நல்ல ஆட்டத்தை தர முயற்சித்தேன். பந்திடம் சிக்காமல் இருக்க முயற்சித்தேன். பந்துவீச்சாளரை கண்டுக்கொள்ளாமல் சிறப்பாக விளையாட வேண்டும், எங்களிடம் விக்கெட்டுகள் வேறு இருந்தன, எனவே அது ரஷித் கான் அல்லது வேறு யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆட முடிந்தது. அதனால் ஆப்கனின் நம்பர் 1 பந்துவீச்சாளரிடமிருந்து ரன்களைப் பெறுவது மகிழ்ச்சியாக இருந்தது என்று ராகுல் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+