For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போராட்டத்திற்கு பணிந்தது சீனா.. கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு! கடைகளை திறக்கலாம்! மக்கள் வரவேற்பு!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் கடுமையாக தொடர்ந்த நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.

கடந்த 2019 சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக உலக பொருளாதாரமே முடங்கிவிட்டது.

வேலையின்மை, வருமானம் இழப்பு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு என உலகமே வீட்டிற்குள் முடங்கின. வீடற்றவர்கள் கொத்துக்கொத்தாக மாண்டனர்.

குட் நியூஸ்.. உலகம் முழுக்க 90% மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி வந்துடுச்சி.. WHO சொல்றதை பாருங்ககுட் நியூஸ்.. உலகம் முழுக்க 90% மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி வந்துடுச்சி.. WHO சொல்றதை பாருங்க

 கோவிட்

கோவிட்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 64.5 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 66.4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்புகள் குறைத்து காட்டப்படுகிறது என்றும், உண்மையான உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. உலக வல்லரசான அமெரிக்காவில் மட்டும் 11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 9.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால் உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில் 5,235 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளை தவிர்க்க சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.

 போராட்டம்

போராட்டம்

குறிப்பாக பெய்ஜிங், ஷாங்காய், உரும்கி, நான்ஜிங், குவாங்சோ, வூஹான் ஆகி நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. வூஹானில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற போராட்டத்தில் "இந்த கட்டுப்பாடுகள் வூஹானில்தான் தொடங்கியது. எனவே வ்ஊஹானிலேயே இதற்கு முடிவுக்கு கட்ட வேண்டும்" என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். மேலும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதிபர் ஜி ஜிங்பிக்கிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். ஷாங்காயில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தங்களது செய்தியாளர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. தொடர் கட்டுப்பாடுகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 தளர்வுகள் என்னென்ன?

தளர்வுகள் என்னென்ன?

இந்த போராட்டங்களை அடுத்து சில நகரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்நகரங்களில் சோதனை மேற்கொள்ளப்படும் விகிதம் குறைக்கப்படும். அதேபோல தனிமைப்படுத்திக் கொள்வதற்கான நாட்களின் அளவும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இனி வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு செல்ல 72 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

 அட்வைஸ்

அட்வைஸ்

அதேபோல இனி மெடிக்கல்களில் காய்ச்சல், தொண்டை வலி, சளி உள்ளிட்டவற்றிற்கு மருத்து வாங்குபவர்கள் இனி அவர்கள் பெயரை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. மேலும், கோவிட் சோதனைச் சாவடிகள் படிப்படியாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மக்கள் வரவேற்றுள்ளனர். முன்னதாக ஓட்டல்களை தவிர வேறெந்த கடைகளும் திறந்திருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அனைத்து கடைகளையும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீனா கடைப்பிடித்து வரும் 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கையால் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐஎம்எஃப் எச்சரித்திருந்தது. இதனையடுத்து இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As protests against the Corona restrictions spread in China, the country's government has announced that it will relax the restrictions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X