எல்லாம் ஓவர்.. தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் ஈரோடு கிழக்கு! அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்!
ஈரோடு : காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதால் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதோடு, அப்பகுதி தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டி இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் நடக்கும் முதல் இடைட் தேர்தல் என்பதாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் தேர்தல் என்பதாலும் இந்த தேர்தல் மிகவும் ஆர்வத்துடன் எதிர் நோக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. திருமகன் ஈவெரா மறைவையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்த நிலையில் திரிபுரா நாகாலாந்து மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு
அதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு ஜனவரி 31ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக பிப்ரவரி 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது எட்டாம் தேதியும் வாபஸ் பெற கடைசி தேதி பிப்ரவரி 10ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பட்ட உடனேயே அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ளன.

சத்யபிரதா சாகு
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறி இருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,"ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதிய திட்டங்களை செயல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

நடத்தை விதிமுறைகள்
தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் பறக்கும் படையினர் துணை ராணுவத்தினர் உள்ளிட்டோரை வரவேற்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுமார் 238 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் மொத்தம் இருக்கும் நிலையில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் 23 மூன்றாம் பாலினத்தவரும் இருக்கின்றனர்.

கட்டுப்பாடுகள்
தேர்தலுக்காக 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஈரோடு நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தேர்தல் நடக்கும்போது கொரோனா பாதிப்பு இருந்தால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் புகைப்படம் ஆகியவற்றை மறைக்கும் பணி தொடங்கி இருக்கிறது.

படங்கள் அகற்றம்
அந்த தொகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அரசு கட்டிடங்களில் முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் சோதனைகளும் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் முறையான ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கல்வெட்டுகளில் உள்ள தலைவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டன; வாக்குப்பதிவு மற்றும் விபாட் எந்திரங்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications