நபிகள் நாயகம் குறித்து அவதூறு.. தெலுங்கானா பாஜக எம்எல்ஏ உடனடி கைது! அதிரடி காட்டிய கேசிஆர் அரசு
ஐதராபாத்: நுபுர் ஷர்மா பானியில் நபிகள் நாயகம் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு எதிராக ஏராளமான இஸ்லாமியர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் 3 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பிரபல ஸ்டான்ட் அப் காமெடியனாக இருந்து வருபவர் முனவர் ஃபரூக்கி. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் இவரது நகைச்சுவைகளில் அரசியல் நய்யாண்டி, சமூக அவலம் குறித்து அதிகம் பேசுவார்.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள், புதிய சட்ட மசோதாக்கள் பற்றியும் நகைச்சுவையுடன் கலந்து விமர்சிப்பார் முனவர் ஃபரூக்கி.

முனவர் ஃபரூக்கி
இதன் காரணமாக முனவர் ஃபரூக்கியை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் இந்துத்துவ அமைப்புகள் குரல் எழுப்பி வந்தன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் முனவர் ஃபரூக்கி கைதும் செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெற இருந்த முனவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டு, டிக்கெட்டுகள் விற்கப்பட்ட பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தன.

ஐதராபாத்
குஜராத்தின் சூரத், வதோதரா, மும்பை, ராய்பூர், கோவா உள்ளிட்ட பல நிகரங்களில் இவரது நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டன. பெங்களூருவில் கடந்த ஆண்டு இதுபோல் அவரது நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு போலீசார் அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முனவர் ஃபரூக்கி இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐதராபாத்தில் நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்துத்துவா எதிர்ப்பு
இதனை அடுத்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஏராளமான இந்துத்துவா அமைப்பினர் திரண்டு நின்று முழக்கங்களை எழுப்பினர். பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 2,000 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் முனவர் ஃபரூக்கி அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்
இந்த நிலையில் கோஷாமால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங், முனவர் ஃபரூக்கி மற்றும் அவரது தாயாரை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். 10 நிமிடங்கள் 27 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைபோல் நபிகள் நாயகம் குறித்து ராஜா சிங் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. வீடியோவின் முடிவில் நான் பேசிய அனைத்தும் நகைச்சுவை என்று அவர் கூறி இருக்கிறார்.

கைது
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராஜா சிங் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்த ஐதராபாத் போலீஸ் தற்போது அவரை கைது செய்து இருக்கிறது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications