உதவி கேட்டு கதறியும் யாரும் உதவவில்லை... தெலுங்கானாவில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி கண்ணீர்
ஐதராபாத்: ‛‛மதம்விட்டு மதம் திருமணம் செய்ததால் ரோட்டில் மக்கள் மத்தியில் என் கணவரை கொன்றுவிட்டனர். உதவி கேட்டு கதறியும் யாரும் உதவ முன்வரவில்லை. யாராவது உதவி செய்திருந்தால் நிச்சயம் எனது கணவரை காப்பாற்றி இருக்கலாம்'' என தெலுங்கானாவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த நாகராஜூவின் மனைவி அஷ்ரீன் சுல்தானா அழுதபடி கூறினார்.
தெலுங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் மார்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 25). தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் கார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார்.
இவரும் பக்கத்து கிராமமான கானாப்பூரை சேர்ந்தவர் அஷ்ரீன் சுல்தானா. இவர்கள் 2 பேரும் பள்ளி காலத்தில் இருந்து காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை.

மதம்விட்டு மதம் திருமணம்
இதையடுத்து ஓல்டு சிட்டியில் உள்ள ஆர்ய சமாஜ் மந்தீரில் 2 பேரும் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு சரூர் நகரில் உள்ள அணில் குமார் நகரில் தனியாக வாழ தொடங்கினர். நேற்று முன்தினம் இரவில் சரூர் நகர் தாசில்தார் அலுவலகம் அருகே நாகராஜ் - அஷ்ரீன் சுல்தானா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனார். அப்போது 2 பேர் அவர்களை வழிமறித்து இரும்பு கம்பியால் நாகராஜை தாக்கினர். மேலும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். அஷ்ரீன் சுல்தானாவின் கண்முன்னே நாகராஜூவின் உயிர் பிரிந்தது.

ஆணவ படுகொலை
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்த நிலையில் அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி பரப்பபை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில் நாகராஜை, அஷ்ரீன் சுல்தானாவின் குடும்பத்தினர் ஆணவ படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் அஷ்ரீன் சுல்தானாவின் சகோதரர் உள்பட சிலரிடம் விசாரித்து வருகின்றனர். தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கண்முன்னே கொன்றுவிட்டனரே...
இந்நிலையில் கணவர் நாகராஜூவை இழந்த அஷ்ரீன் சுல்தானா சோகத்தின் உச்சம் சென்று தொடர்ந்து அழுதபடி உள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறுகின்றனர். அவரிடம் மதம்விட்டு மதம் திருமணம் செய்வது பெரிய குற்றமா என அவர் தொடர்ந்து கூறுவதோடு, முன்னெச்சரிக்கையாக இருந்தும் என் கணவரை என் கண்முன்னே கொன்று விட்டனரே என கூறி மனம் நொந்து கண்ணீர் வடிக்கிறார். இதுபற்றி அஷ்ரீன் சுல்தான் கூறியதாவது:

இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தனர்
நானும் எனது கணவரும் மோட்டார் சைக்களில் ரோட்டில் வந்து கொண்டிருந்தோம். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் இரண்டு பேர் வந்தனர். அவர்கள் எங்களை வழிமறித்தனர். என்னவென்று கேட்பதற்குள் எனது கணவரின் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தனர். அவர் நிலைக்குலைந்து போனார். நானும் அதிர்ச்சியடைந்தேன்.

உதவியிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்
தாக்குதல் நடத்திய இருவரையும் தடுக்க முயற்சித்தேன். அவர்கள் 2 பேர் என்பதால் என்னால் தடுக்க முடியவில்லை. ஒருவரை தடுத்தால் இன்னொருவரை கணவரை தாக்குகிறார். இதனால் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டேன். யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. யாராவது உதவி செய்திருந்தால் நிச்சயம் எனது கணவரை காப்பாற்றி இருக்கலாம். அவர் இறந்திருக்கமாட்டார். ஆனால் ஒருவரும் உதவி செய்யவில்லை. சம்பவம் நடந்த 30 நிமிடத்துக்கு பிறகே போலீசார் வந்தனர்.

2 முறை கொல்ல முயற்சி
எனது சகோதரர் தான் எனது கணவரை கொன்றுள்ளார். திருமணத்துக்கு முன்பே என்னை கொல்ல அவர் முயன்றார். இரண்டு முறை தூக்கிலிட முயற்சித்தார். நாகராஜை நான் திருமணம் செய்து கொண்டால் எனது சகோதரர் என்னை கொன்று விடுவார் என தாயும் மிரட்டினார். உயிருக்கு பயந்து நான் ஐதராபாத் ஓடினேன்.

தேடிப்பிடித்து கொன்றுவிட்டனர்
இதையடுத்து ஆர்ய சமாஜ் கோவிலில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். பாதுகாப்பு கோரி எஸ்பி அலுவலகத்திலும் மனு செய்தோம். குடும்பத்தினரிடம் இருந்து மிரட்டல் இருப்பதை போலீசாரிடமும் தெரிவித்து இருந்தோம். அச்சுறுத்தல் காரணமாக குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சிம்கார்டுகளை மாற்றினோம். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினோர். இருப்பினும் என் கணவரை தேடிப்பிடித்து கொலை செய்துவிட்டனர்'' எனக்கூறி கதறி அழுதார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications