For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி.யில் மூரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி - 50 பேர் காயம்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் மூரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

டாடா நகரில் இருந்து ஜம்முவுக்கு சென்று கொண்டிருந்த மூரி எக்ஸ்பிரஸ் ரயில், உத்திரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள சிராத்து அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

4 killed as train derails in UP

ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்,.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ரூ. 2 லட்சம் நிதியுதவி:

இதற்கிடையே இந்த ரயில் விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப் படுவதாக அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

English summary
Four persons were killed and over 50 injured when eight bogies of an express train bound for Jammu Tawi derailed in Uttar Pradesh on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X