For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் அப்துல் கலாம் சிலையை மறைத்து...பிறந்த நாள் பேனர்...தெலுங்கு தேசம் கண்டனம்!!

Google Oneindia Tamil News

தர்மாவரம்: ஆந்திரா மாநிலம் தர்மாவரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் சிலையை மறைத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பேனர் வைத்து இருப்பதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆனந்த்பூர் மாவட்டத்தில் இருக்கும் தர்மாவரம் எம்எல்ஏ கதிர்ரெட்டி வேங்கடராமி ரெட்டி. இவருக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி இவருக்கு வாழ்த்து தெரிவித்து இவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டி, பேனர் வைத்து இருந்தனர்.

Abdul Kalam statue covered by YSRCP leaders birthday banner in Andhra

இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சிலையை மறைத்து பேனர் வைக்கப்பட்டு உள்ளது என்று கண்டித்துள்ளனர்.

Abdul Kalam statue covered by YSRCP leaders birthday banner in Andhra

இதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்து இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், ''நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்து இருக்கும் தலைவர்களின் சிலைகளுக்கு ஆந்திராவில் மரியாதை இல்லை என்பதை ஆந்திரா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதியின் சிலையை மறைத்து பிறந்த நாள் ஃபிளக்சி பேனர்களை வைத்துள்ளனர். இனி ஒய்எஸ்ஆர் சிலைகளைத்தான் ஆந்திரா மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

பிடன் vs டிரம்ப்.. அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஓட்டு யாருக்கு? வெளியான அசத்தல் சர்வே முடிவு பிடன் vs டிரம்ப்.. அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஓட்டு யாருக்கு? வெளியான அசத்தல் சர்வே முடிவு

English summary
Abdul Kalam statue covered by YSRCP leaders birthday banner in Andhra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X