For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவை உலுக்கிய நடிகை பாவனா வழக்கு... இதுவரை நடந்தது என்ன?

By Gajalakshmi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் கடத்தப்பட்டு காரில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கலாம்:

பிப்ரவரி 17 : அதானி அருகே நடிகை பாவனாவை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இது குறித்து பாவனா போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் பாவனாவின் கார் ஓட்டுனர் மார்ட்டின் ஆன்டனி கைது செய்யப்பட்டார்.

Actress Bavana kidnap case and arrestes so far

பிப்ரவரி 19: ஆளப்புழாவில் இருந்து 'வடிவல்' சலீம் மற்றும கன்னூரில் இருந்து பிரதீப் என்ற இருவர் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 20 : மேலும் ஒரு சந்தேகத்திற்குரிய குற்றவாளி மணிகண்டன் தம்மனம் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகையை கடத்த கூலிப்படை அழைக்கப்பட்ட தகவல் கிடைத்தது.

பிப்ரவரி 21: மலையாள நடிகர் ஒருவரின் வாக்குமூலத்தை இந்த வழக்கில் போலீசார் பதிவு செய்தனர்.

பிப்ரவரி 22 : நடிகர் திலீப் தன்னிடம் போலீஸ் விசாரணை நடத்தவில்லை என்று மறுத்தார்.

பிப்ரவரி 23 : முக்கிய குற்றவாளி பல்சர் சுனி மற்றும் அவனது கூட்டாளி விஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக முடிவு செய்தனர். ஆனால் கோர்ட் வளாகத்தில் இருந்து அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டனர். இதனால் இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர்

பிப்ரவரி 24 : குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எனினும் பாவனாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வீடியோ உள்ள செல்போன் சிக்கவில்லை. பாவனாவை கடத்தியதற்காக ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டதாகக் கூறிய சுனி, செல்போன் குறித்த தகவல்களைத் தர மறுத்துவிட்டார்.

பிப்ரவரி 25 : நீதிமன்றத்தில் கூட்டு சதி என்ற ரீதியில் விசாரணை நடத்த போலீஸ் அனுமதி கோரியது. நடிகை 4 பேர் குற்றவாளி என்று கூறியுள்ளதால், சுனி மற்றும் விஜேஷிடம் மார்ச் 8ம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

பிப்ரவரி 26: குற்றவாளிகளின் செல்போன், கணிணி உள்பட இதர உடைமைகள் கோவையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

பிப்ரவரி 27: நடிகை குறித்த தவறான வீடியோக்களை பரப்பும் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு முகநூல் மேற்பார்வையாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 3: குற்றவாளிகளிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் கேட்டுக் கொண்டதால், 4 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டது.

மார்ச் 19: சுனியுடன் நெருக்கத்தில் இருந்த பெண் ஷைனி கைது செய்யப்பட்டார்.

ஜுன் 24 : நடிகர் திலீப் மற்றும் இயக்குனர் நதிர்ஷா தாங்கள் மிரட்டப்பட்டதாகக் கூறினர். சுனி தனக்கு விடுத்த மிரட்டல் கடிதம் என்று ஒரு கடிதத்தையும், ஆடியோ உரையாடலையும் திலீப் வெளியிட்டார்.

ஜுன் 25: நடிகர் திலீப் தன்னை குறி வைத்தே வழக்கு நகர்த்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

ஜுன் 28 : திலீப் மற்றும் நதிர்ஷா இருவரிடமும் சுமார் 13 மணி நேரம் அலுவா காவல் கிளப்பில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.

ஜூலை 10 : நடிகர் திலீப் கைது செய்து போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

English summary
Mollywood Actress Bavana's Kidnap case and the arrestes do far upto the legend actor Dilip arrest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X