For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதியை இடிக்க கரசேவகர்களுக்கு பயிற்சி அளித்த முன்னாள் ராணுவ அதிகாரிகள்: கோப்ராபோஸ்ட்

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட செயல் என்றும், கரசேவகர்கள் திடீரென கூடி இடிக்கவில்லை என்றும், இந்த சதித் திட்டம் குறித்து அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், பாஜக தலைவர் அத்வானி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் கோப்ராபோஸ்ட் இணையத்தளம் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் தெரியவந்துள்ளது.

முன்னாள் ராணுவ அதிகாரிகள் பயிற்சி:

முன்னாள் ராணுவ அதிகாரிகள் பயிற்சி:

மேலும் பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றவர்களுக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளை வைத்து சங் பரிவார் அமைப்புகள் பயிற்சி அளித்துள்ள தகவலும் தெரியவந்துள்ளது.

மசூதி இடிப்பில் பங்கேற்ற 23 முக்கிய நபர்களிடம் கோப்ராபோஸ்ட் மேற்கொண்ட பேட்டியில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. கோப்ராபோஸ்ட் நிருபர் ஆஷிஷ் என்பவர் ராமஜென்ம பூமி இயக்கம் குறித்து புத்தகம் வெளியிடப் போவதாகவும், அதற்காக விவரம் சேகரிக்க வந்ததாகவும் கூறி இந்த 23 பேரிடம் மறைமுக பேட்டி எடுத்துள்ளார்.

உமா பாரதி, வினய் கட்யார்:

உமா பாரதி, வினய் கட்யார்:

இவர் நிருபர் என்பது தெரியாமல் இவரிடம் பல தகவல்களை கொட்டியுள்ளனர் உமா பாரதி, வினய் கட்யார், ஆச்சார்யா தர்மேந்திரா, மகந்த் வேதாந்தி ஆகியோர்.

திடீரென கர சேவகர்கள் கூடிவிட்டதாகவும், இவர்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்கும் முன்பே மசூதியை அவர்கள் இடித்துவிட்டதாகவும் தான் நரசிம்ம ராவும் பாஜகவும் கல்யாண் சிங்கும் கூறி வருகின்றன. ஆனால், இது ஒரு திட்டமிட்ட சதிச் செயல் என்றும், இதற்காக பலருக்கும் இடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் ராம ஜென்ம பூமி இயக்கத்தில் இருந்த தலைவர்களே தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் வைத்து இடிப்பு பயிற்சி:

குஜராத்தில் வைத்து இடிப்பு பயிற்சி:

அயோத்யா, பரீதாபாத், தண்டா, லக்ளென, கோரக்பூர், மதுரா, மோராதாபாத், ஜெய்ப்பூர், அவுரங்காபாத், பைசாபாத், மும்பை, குவாலியர் ஆகிய இடங்களுக்குச் சென்று தனது ரகசிய விசாரணையை நடத்தி இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது கோப்ராபோஸ்ட்.

மசூதி இடிப்பு திட்டம் மிக ரகசியமாக தீட்டப்பட்டதாகவும், பஜ்ரங் தள் அமைப்பு குஜராத்தில் வைத்து 1992ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடிப்புப் பணிக்கென 38 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளித்ததாகவும், இந்தப் பயிற்சியை அளித்தது முன்னாள் ராணுவ அதிகாரிகள் தான் என்றும் தெரியவந்துள்ளது.

38 பேரும் பிரவீண் தொகாடியா, அசோக் சிங்கலும்:

38 பேரும் பிரவீண் தொகாடியா, அசோக் சிங்கலும்:

பிரவீண் தொகாடியா, அசோக் சிங்கல் உள்ளிட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட சாதுக்கள் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு வந்து பயிற்சி பெறுவோர் இடையே பேசியதாகவும் தெரியவந்துள்ளது.

உயரமான கட்டடத்தில் ஏறுவது, கயிறுகள், சங்கிலிகளை பயன்படுத்தி கட்டடத்தில் தொங்கியபடியே அதை உடைப்பது போன்ற பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. லக்ஷமண் சேனா என்ற பெயரில் இந்த 38 பேரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

குண்டு வைக்க தயார் நிலையில் இருந்த சிவசேனா:

குண்டு வைக்க தயார் நிலையில் இருந்த சிவசேனா:

இதற்கிடையே மசூதியை லக்ஷ்ண் சேனாவால் உடைக்க முடியாவிட்டால் பிளான்-பியும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த பிளான்-பி சிவசேனாவின் கையில் தரப்பட்டது. அதன்படி மசூதியை இந்த சேனாவால் உடைக்க முடியாவிட்டால் அதை டைனமைட்கள் வைத்து உடைக்க சிவ சேனா தயார் நிலையில் வைக்கப்பட்டது.

ஆனால் முன்னாள் ராணுவத்தினரால் பயிற்சி அளிக்கப்பட்ட லக்ஷமண் சேனா படையே கடப்பாரை, மண்வெட்டி, பெரிய சுத்தியல்கள் உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு மசூதியை இடித்துவிட்டதால் டைனமைட்களை உபயோகிக்க வேண்டிய அவசியம் வரவில்லை என்று கோப்ராபோஸ்டிடம் பேட்டி அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

1990லேயே உயிர்களை வேண்டுமென்றே பலி கொடுத்து...

1990லேயே உயிர்களை வேண்டுமென்றே பலி கொடுத்து...

முதலில் 1990ம் ஆண்டு அக்டோபரில் இந்த மசூதியை இடிக்க நடந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அப்போது மசூதியை இடிக்க வந்தவர்கள் மீது போலீசார் சுட்டதில் சிலர் இறந்தனர். ஆனால், இப்படி சிலர் இறந்தால் தான் ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு வலு சேரும் என்று விஎச்பியின் தலைவர் அசோக் சிங்கல் தெரிவிதத்தாக கோப்ராபோஸ்ட்டிம் வாம்தேவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கரசேவகர்களான கோத்தாரி சகோதரர்கள் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொல்ல சங் பரிவாரில் இருந்த சில சுயநல ஆசாமிகளே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வினய் கட்யார் மீது பாயும் உமா பாரதி:

வினய் கட்யார் மீது பாயும் உமா பாரதி:

கோப்ராபோஸ்ட்டிம் பேசிய உமா பாரதி கூறுகையில், கோத்தார் சகோதரர்களை வழி நடத்தி இடிப்பில் ஈடுபட வைத்த வினய் கட்யார் போலீசார் சுட ஆரம்பித்தவுடன் ஓடிவிட்டார். அவர்களைக் காக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் டிசம்பர் 6ம் தேதி காலை மசூதியை எப்படியும் இடித்தே தீருவோம் என்று கரசேவர்கள் உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டனர். இந்தப் பணியை செய்தது ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் ஆவார். உறுதிமொழி எடுத்த பின்னரே இடிப்புப் பணி துவங்கியது.

நரசிம்மராவ் பெரும் உதவி:

நரசிம்மராவ் பெரும் உதவி:

மசூதியை இடிப்பதில் பிரதமர் நரசிம்மராவ் மிக உதவிகரமாக இருந்ததாக வினய் கத்யார், பிஎல் சர்மா, சந்தோஷ் துபே, சாக்ஷி மகாராஜ், ராம்விலாஸ் வேதாந்தி ஆகியோர் கோப்ராபோஸ்டிடம் தெரிவித்துள்ளனர். அதாவது மசூதி இடிக்கப்பட உள்ளது தெரிந்தும் மத்தியப் படைகளை அனுப்பாமல் வேண்டுமென்றே அமைதி காத்து மறைமுகமாக உதவினார் ராவ்.

மேலும் மசூதியை 6ம் தேதி இடிக்கப் போவதாக அப்போதைய முதல்வர் கல்யாண் சிங்கிடம் 5ம் தேதி இரவே மகந்த் வேதாந்தி நேரில் தெரிவித்துவிட்டதாகவும் இந்தப் பேட்டிகள் மூலம் தெரியவந்துள்ளது.

கல்யாண் சிங்கை கட்டுப்பாட்டில் வைத்த ஜோஷி:

கல்யாண் சிங்கை கட்டுப்பாட்டில் வைத்த ஜோஷி:

இதையடுத்து 6ம் தேதி காலை கல்யாண் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட முடிவு செய்ததாகவும், ஆனால் அவரை எச்.வி.சேஷாத்ரி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த பாஜக தலைவர்கள் தடுத்துவிட்டதாகவும், மசூதி முழுமையாக இடித்து முடிக்கப்படும் வரை கல்யாண் சிங்கை பாஜக தலைவர்கள் கிட்டத்தட்ட தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்ததாகவும் கோப்ராபோஸ்ட் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை இன்று கோப்ராபோஸ்ட் வெளியிடவுள்ளது.

English summary
An elaborate sting operation, conducted on 23 key people of the Ram Janambhoomi movement, claims that the demolition of the Babri Masjid on December 6, 1992, was elaborately planned by the various wings of the Sangh parivar and executed with precision by trained volunteers. It wasn't, as it is claimed, a case of mob frenzy going out of control, leading to the fall of the disputed 16th century structure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X