For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்துக்குள் நுழைந்துள்ள 10 பயங்கரவாதிகள்- சோம்நாத் கோவில் மகாசிவராத்திரி நிகழ்ச்சிகள் ரத்து

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலத்திற்குள் 10 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை அளித்துள்ள தகவலை அடுத்து அம்மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவில் மகாசிவராத்திரி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் மகாசிவராத்திரி நிகழ்வுகளை சீர்குலைக்க நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குஜராத்தில் போலீஸாருக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுமார் 200 பேர் கண்காணிப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Amid terror threats cultural programme at Somnath temple deferred

டெல்லியில் முக்கிய இடங்கள், கட்டடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பெரிய வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ரவுடிகளின் நடமாட்டமும் போலீஸாரால் கண்காணிக்கப்படுகிறது. டெல்லியில் உயரமான கட்டடங்களில் கண்காணிப்பு கேமிராவைப் பொருத்தி, அவற்றின் மூலம் மக்களின் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

குஜராத்தில் முக்கியமான பகுதிகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதால் பிரசித்தி பெற்ற சோமநாதர், ஜுனாகட், அக்சர்தாம் கோயில்களுக்கு பக்தர்கள் அதிகம் வருவார்கள். இதனால், அக்கோயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகமாக தரிசனத்திற்கு வரும் சோம்நாத் கோவிலின் சிவராத்திரி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

English summary
In view of the terror threat across Gujarat, the Gir-Somnath district administration has decided to postpone a cultural event scheduled in the famous Somnath temple premises for the Maha Shivrati festival for Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X