பணியின் போது செல்போன்... கண்டித்த மேஜரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஜவான் கதிரேசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மேஜர் ஒருவர் சக ராணுவ வீரரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக்கொலை செய்யப்பட்ட ராணுவ மேஜரின் பெயர் ஷிகர் தாபா என்பதாகும். இவர் நாயக் கதிரேசன் என்ற வீரர் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Army Major shot dead by jawan use of mobile phone

இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் கதிரேசன் தனது உயரதிகாரியான மேஜரை தனது கையில் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியினால் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்போன் இப்போது மனிதர்களின் 6வது விரலாகி விட்டது. ராணுவத்தினர் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை உள்ள நிலையில் தடையை மீறி பயன்படுத்தியதோடு கண்டித்த மேஜைரை சுட்டு கொலை செய்துள்ளார் ஜவான் கதிரேசன்.

A Video Clip on the Chinese army forcibly entered in Sikkim border-Oneindia Tamil

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ராணுவ உயரதிகாரியை, வீரர் ஒருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An army jawan fired upon a Major after being reprimanded for using mobile phone during duty hours in Uri sector of Jammu and Kashmir.
Please Wait while comments are loading...