"பாகிஸ்தானுடன் தொடர்பு.." காங்கிரஸ் தலைமை குறிவைத்து அட்டாக்.. அசாமில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக
திஸ்பூர்: அசாமில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அசாம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கௌரவ் கோகோய் மீது அம்மாநில முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிஸ்வ சர்மா சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கவுரவ் கோகோய்க்கு பாகிஸ்தானுடன் தொடர்புகள் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. அதன்படி அசாம் மாநிலத்திலும் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அசாம் மாஜி முதல்வர் தருண் கோகாயின் மகன் கௌரவ் கோகோய் இந்த முறை காங்கிரஸ் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்.

ஹிமந்த பிஸ்வ சர்மா
இதற்கிடையே காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் மீது சில காட்டமான குற்றச்சாட்டுகளை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா முன்வைத்துள்ளார். கவுரவ் கோகோயின் பாகிஸ்தான் தொடர்புகள் குறித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை வெளியான நிலையில், இந்த விவகாரத்தை மத்திய விசாரணை முகமை விசாரிக்க வேண்டும் என்று பிஸ்வ சர்மா வலியுறுத்தினார்.
கோகோயின் மனைவி பாகிஸ்தானுடன் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அறிக்கை ஒன்று வெளியாகி இருந்த நிலையில், அதைச் சுட்டிக்காட்டியே ஹிமந்த பிஸ்வ சர்மா இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்தாக எழுந்த புகாரே இந்த வழக்கின் மைய குற்றச்சாட்டாகும்.
மத்திய ஏஜென்சி விசாரணை
பாகிஸ்தான் திட்டக் கமிஷனின் முன்னாள் ஆலோசகர் தௌகீர் ஷேக்குடன் இஸ்லாமாபாத்தில் பணிபுரிந்தபோது இத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க அசாம் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழு தனது அறிக்கையைச் சமீபத்தில் தான் மாநில அரசுக்குச் சமர்ப்பித்தது.
வழக்கின் முக்கியத்துவம் மற்றும் அதன் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மத்திய விசாரணை முகமை இதை விசாரிக்க வேண்டும் என பிஸ்வ சர்மா அமைச்சரவை முடிவு செய்தது. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்து விசாரிக்கக் கோரிக்கை வைத்துள்ளதாகவும், தேசியப் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை கருதியே இந்த எடுக்கப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். அசாம் அரசுக்குப் புலனாய்வு முகமைக்குச் சில வரம்புகள் உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய விசாரணை ஏஜென்சியின் தலையீடு அவசியம் என்று சர்மா வலியுறுத்தினார்.
பாகிஸ்தானுடன் தொடர்பு
அவர் மேலும் கூறுகையில், "எலிசபெத்துக்கும் கௌரவ் கோகோய்க்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.. இது விசாரிக்கப்பட வேண்டும். தௌகீர் ஷேக்குடன் ரகசிய ஆவணங்களை கோகோயின் மனைவி பகிர்ந்ததாக 44 பக்க SIT அறிக்கை கூறுகிறது. மேலும், கோகோயின் மனைவி லீட் பாகிஸ்தான்' என்ற பாகிஸ்தான் நிறுவனத்திடமிருந்து சம்பளம் பெற்றதற்கான பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன. மேலும், அடையாளம் தெரியாமல் இருக்க அவர் அட்டாரி எல்லை வழியாக ஒன்பது முறை பாகிஸ்தானுக்குப் பயணம் செய்துள்ளார்.
கோகோய் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் பாகிஸ்தான் நிறுவனத்திற்கு அவ்வப்போது தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். 2013-ல் பாகிஸ்தான் பயணத்தின் போது, கோகோயும் அவரது மனைவியும் முதலில் லாகூரில் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பின்னர் இஸ்லாமாபாத், கராச்சிக்கும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைமை மீது தாக்கு
மேலும், 2022ல் தனது மைனர் மகனுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை பெற, டெல்லி பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவரது பாஸ்போர்ட்டை கோகோய் ஒப்படைத்தார். மகனின் பாஸ்போர்ட்டில் மதம் இந்து என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வழங்கப்பட்டபோது, மதம் என்ற இடம் காலியாக விடப்பட்டது. இவை எல்லாம் குறித்து கோகாய் 10 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும்" என்று சவால் விடுத்துள்ளார்.
கோகோயின் பாகிஸ்தான் தொடர்புகள் தெரிந்திருந்தும் அவரை காங்கிரஸ் தலைமை பாதுகாக்கிறதா என்று கேள்வி எழுப்பிய சர்மா, காந்தி குடும்பத்திற்கு கோகோய் நெருக்கமானவர் என்றும் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோகோய் பதில்
அதேநேரம் கோகோய் இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிஸ்வா சர்மா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் முட்டாள்தனமாகப் பேசுவதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.
-
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு












Click it and Unblock the Notifications