மோடி திறந்த அடல் பாலம்.. “அலர்ட்” ஆன குஜராத் அரசு! கட்டுப்பாடு விதித்த மாநகராட்சி
காந்திநகர்: குஜராத்தில் பழமையான மோர்பி தொங்கு பாலம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 134 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் மேம்பாலத்தில் ஒருமணி நேரத்தில் ஆட்கள் நிற்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆறு உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை காண வருகை தருகின்றனர்.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை குஜராத் மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொண்டு வருகின்றன.

அடல் பாலம்
அந்த வகையில் சபர்மதி ஆற்றில் எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் "அடல்" என்ற பெயரில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

கட்டுப்பாடு
அழகிய வடிவமைப்பு கொண்ட இந்த பாலம் அகமதாபாத் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரே நேரத்தில் 12,000 நபர்களின் எடையை இந்த அடல் பாலம் தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முந்தினம் குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு 3,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.

பாலத்தின் நீளம்
300 மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டு இருக்கும் இந்த பாலம் சபர்மதி ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்கு கரை பகுதியை இணைக்கிறது. அதேபோல் மேற்கு கரையில் இருக்கும் மலர் பூங்கா மற்றும் மைதானம் இடையே இருக்கும் பிளாசாவை கிழக்கு கரையில் இருக்கும் கண்காட்சி மையத்துடன் இணைத்தது.

அழகிய வடிவமைப்பு
இந்த பாலத்தின் மேற்கூரை வடிவமைப்பே தனித்துவமாக அமைந்து இருந்தது. பல வண்ணங்களை கொண்டு அமைக்கப்பட்ட பாலத்தின் மேற்கூரை வண்ணமயமாக காட்சி தருகிறது. குஜராத்தின் பிரபலமான பட்டம்விடும் திருவிழாவை அடிப்படையாக கொண்டு பட்டத்தின் வடிவில் அதன் மேற்கூரைகள் வடிவமைக்கப்பட்டன.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications