For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகார் தேர்தலில் யாருக்கு என்ன கிடைக்கப் போகிறது?... குழப்பம் தரும் எக்ஸிட் போல் முடிவுகள்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் எக்ஸிட் போல் முடிவுகள் பெரும் குழப்பத்தையே கொடுத்துள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணிக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருந்தாலும் கூட தெளிவான முடிவு கிடைக்காது என்று கருத்துக் கணிப்ப முடிவுகள் கூறுகின்றன.

அதேசமயம், ஊசலாடும் சட்டசபை ஏற்படுமா என்பதும் சந்தேகமாக உள்ளது. ஒன்று ஐக்கிய ஜனதாதள கூட்டணி அமோக வெற்றி பெறும். அல்லது பாஜக கூட்டணி வெற்றி பெறலாம். இரண்டில் ஒன்றுக்குத்தான் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இருப்பினும் எக்ஸிட் போல் முடிவுகள்தான் இப்போது பெரும் குழப்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டன.

ஆறு கருத்துக் கணிப்புகளில்

ஆறு கருத்துக் கணிப்புகளில்

ஆறு கருத்துக் கணிப்பு முடிவுகளை எடுத்துக் கொண்டால் அதில் நான்கு கணிப்புகள் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. இந்தக் கூட்டணியே மெஜாரிட்டியைப் பெறும் என்று இவை கூறுகின்றன.

ஒரு கணிப்பு பாஜகவுக்கு

ஒரு கணிப்பு பாஜகவுக்கு

ஒரு கருத்துக் கணிப்பு மட்டுமே பாஜக பெரும்பான்மை பெறும் என கூறுகிறது. இன்னொரு கணிப்பு யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காது என்று சொல்கிறது.

பாஜகவுக்கு ஆதரவாக ஓங்கி அடிக்கும் நியூஸ் 24

பாஜகவுக்கு ஆதரவாக ஓங்கி அடிக்கும் நியூஸ் 24

நியூஸ் 24 சானலுக்காக டுடேஸ் சாணக்கியா எடுத்த எக்ஸிட் போல் முடிவானது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 155 இடங்கள் கிடைக்கும் என அடித்துச் சொல்லியுள்ளது. நிதீஷ் கூட்டணிக்கு 83 இடங்களே கிடைக்கும் என இது கூறியுள்ளது.

நியூஸ் எக்ஸ்

நியூஸ் எக்ஸ்

நியூஸ் எக்ஸ் சானல் எடுத்துள்ள எக்ஸிட் போல் முடிவில் நிதீஷ் கூட்டணிக்கு 135 இடங்கள் கிடைக்கும் என்றும், பாஜக கூட்டணிக்கு 95 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறுகிறது.

ஏசி நீல்சன்

ஏசி நீல்சன்

ஏசி நீல்சன் கணிப்பிலோ நிதீஷ் கூட்டணிக்கு 130 இடங்கள் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 108 இடங்கள் என்றும் கூறியுள்ளது.

நியூஸ் நேஷன்

நியூஸ் நேஷன்

நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பானது நிதீஷ் கூட்டணிக்கு 125 இடங்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளது. அதாவது பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை விட கூடுதலாக 3 இடங்களை இது கொடுக்கிறது. சிவோட்டர் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில், நிதீஷ் கூட்டணிக்கு 122 இடங்களே கிடைக்கும் எனத் தெரிவிக்கிறது.

இந்தியா டுடே - சிசரோ சம பலத்தில்

இந்தியா டுடே - சிசரோ சம பலத்தில்

இந்தியா டுடே சிசரோ நடத்திய கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட நிதீஷ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் சம பலத்துடன் இருப்பதாக தெரிவிக்கிறது. நிதீஷ் கூட்டணிக்கு 117 இடங்கள் கிடைக்கும் என்றும், பாஜக கூட்டணிக்கு 120 இடங்கள் கிடைக்கும் என்றும் இது கூறுகிறது.

இருக்கும்.. ஆனா இருக்காதோ!

இருக்கும்.. ஆனா இருக்காதோ!

எக்ஸிட் போல் முடிவு என்பது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். ஆனால் பீகார் தேர்தல் தொடர்பாக வந்துள்ள கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால் தலை தான் சுற்றுகிறது. யார் சொன்னது போல நடக்கப் போகிறது என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
All the exit poll results on Bihar polls have given a big confusion. Most of the poll results give a thumbs up to the Nitish led alliance and one for BJP alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X