குஜராத்தில் தாமரைகள் “குஷி”.. விட்டதை பிடிக்கும் பாஜக! கவிழும் காங்கிரஸ் - 2017 தேர்தலுடன் ஒப்பீடு
காந்திநகர்: நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், கடந்த 2017 தேர்தல் முடிவுகளுடன் சற்று ஒப்பிட்டு அலசுவோம்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக 27 ஆம் ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருந்து வருகிறது.
அக்கட்சியின் கோட்டையாக பார்க்கப்படும் குஜராத் மாநிலத்தில் பூபேந்திர பட்டேல் தலைமையிலான குஜராத் அரசின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

2 கட்ட தேர்தல்
அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 1 முதல் கட்ட வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. இன்று 2 வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 5 மணியளவில் முடிவுக்கு வந்தது.

மும்முனைப் போட்டி
பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த இந்த தேர்தலின் முடிவுகள் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவியது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்கள் குஜராத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்தனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு ஊடகங்களை எடுத்தன. அதன்படி தற்போது டிவி 9 குஜராத்தி, ரிபப்ளிக், நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்த முடிவுகள் அனைத்தும் பாஜக மீண்டும் குஜராத்தில் ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் 2 வது இடத்தையும், ஆம் ஆத்மி 3 வது இடத்தையும் பிடிக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

சராசரி முடிவுகள்
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின் சராசரியின்படி ஆளும் பாஜக 123 முதல் 139 இடங்களில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 35 முதல் 48 இடங்களில் வெற்றிபெறும் எனவும் இந்த தேர்தலில் 3 வது அணியாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி 4 முதல் 9 இடங்களிலும் மட்டுமே வெல்லும் என்றும், இதர கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் 1 - 9 இடங்களில் வெல்வார்கள் என்றும் தெரிகிறது.

2017 தேர்தல் முடிவுகள்
கடந்த 2017 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொண்டால் பாஜக இதில் விட்டதை பிடிக்க இருப்பது தெளிவாகிறது. 2017 தேர்தலில் அக்கட்சி கைவசம் இருந்த பல முக்கிய தொகுதிகளில் தோல்வியை தழுவி 99 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதே நேரம் காங்கிரஸ் கடைசி வரை கடும் நெருக்கடி கொடுத்து 77 இடங்களில் வென்றது. சுயேட்சைகள் 3 இடங்களிலும், பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications