உங்களை யானைகள் மிதிக்கும்! முதலைகள் கடிக்கும்! புலிகள் வேட்டையாடும்! பாஜகவுக்கு பயம் காட்டும் மம்தா
கொல்கத்தா: மகாராஷ்டிராவை தொடர்ந்து மேற்கு வங்கத்துக்கு பாஜகவினர் வந்தால் அவர்களை முதலைகளும், பெங்கால் புலிகளும் கடிக்கும் என்றும் யானைகள் மிதிக்கும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கிறது.
2016 ஆம் ஆண்டு நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானதால் அமலாக்கத்துறையும் இந்த விசாரணையில் இறங்கியது.

கட்டுக்கட்டாக பணம்
அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது உதவியாளர் அர்பிதா முகெர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20 மொபைல் போன்கள், முக்கிய ஆவணங்கள், பதிவுகள், எலெக்டிரானிக் கருவுகள், வெளிநாட்டு நாணயங்கள், தங்கம் உள்ளிட்ட பல பொருட்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். இந்த நிலையில் பார்த்தா சாட்டர்ஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மம்தா பானர்ஜி பேட்டி
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பார்த்தா சாட்டர்ஜியை ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏன் அனுமதிக்க வேண்டும்? பாஜக மகாராஷ்டிராவை தொடர்ந்து பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று பாஜகவினர் சொல்வது மேற்கு வங்க மக்களை அவமதிக்கும் செயல்.

மத்திய அரசு அப்பாவியா?
மத்திய அரசு நடத்தும் மருத்துவமனையில் பார்த்தாவை அனுமதித்ததற்கான உள்நோக்கம் என்ன? மத்திய அரசு அப்பாவி என்று மாநில அரசுகள் திருடர்கள் என்றும் நினைக்கிறீர்களா? மாநிலங்களால்தான் நீங்கள் இந்த இடத்தில் உள்ளீர்கள். இந்த முறை மகாராஷ்டிராவால் உங்களை எதிர்த்து சண்டையிட முடியவில்லை.

பாஜகவினருக்கு எச்சரிக்கை
மகாராஷ்டிராவை தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இங்கு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் வங்காள விரிகுடாவை கடக்க வேண்டும். அங்குள்ள முதலைகள் உங்களை கடிக்கும். அடுத்து சந்தர்பான் காடுகளில் ராயல் பெங்கால் புலி உங்களை வேட்டையாடும். வடக்கு பெங்காலில் யானைகள் உங்களை ஏறி மிதிக்கும்." என்றார்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications