For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் நாளை ‘தர்பார் மாற்றம்’... மீண்டும் தலைநகரமாகிறது ஸ்ரீநகர் !

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: தர்பார் மாற்றம் எனச் சொல்லப் படும் அரசியல் நிகழ்வுக்கேற்ப நாளை முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகராக ஸ்ரீநகர் மாறுகிறது.

சில இடங்களில் இரண்டை தலைநகரங்கள் அமைக்கப் பட்டிருப்பது நாம் கேள்விப்பட்ட விசயம் தான். ஆனால், இயற்கைக் காரணங்களால் ஜம்மு காஷ்மீரில் வெள்ளையர்கள் காலத்திலிருந்தே இரண்டு தலைநகரங்கள் புழக்கத்தில் இருந்துள்ளது.

தட்ப வெட்ப சூழ்நிலைக்கேற்ப தங்களது ஆட்சிக் காலத்தில் இரண்டு தலைநகரங்களை நிர்மாணித்துள்ளனர் பிரிட்டிஷ்காரர்கள்.

இரு தலைநகரங்கள்...

இரு தலைநகரங்கள்...

அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் 6 மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரும் உள்ளது.

தர்பார் மாற்றம்...

தர்பார் மாற்றம்...

இப்படி தலைநகரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றும் நிகழ்வு 'தர்பார் மாற்றம்' என்று அழைக்கப்பட்டது.

ஸ்ரீநகர்....

ஸ்ரீநகர்....

இதன்படி, கடந்த ஆறு மாதங்களாக குளிர்கால தலைநகர் ஜம்முவில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலகம், நாளை முதல் ஸ்ரீநகரில் இயங்க உள்ளது.

நவம்பரில் மீண்டும் ஜம்மு...

நவம்பரில் மீண்டும் ஜம்மு...

இந்த தலைமைச் செயலகம் வரும் நவம்பர் மாதத்தில் மீண்டும் ஜம்முவில் செயல்பட ஆரம்பிக்கும். மீண்டும் அடுத்த ஆண்டு மே மாதத்தில் எப்போதும் போல் ஸ்ரீநகரில் செயல்படத் தொடங்கும்.

அரசு ஊழியர்கள்...

அரசு ஊழியர்கள்...

இந்தத் தலைநகர் மாற்றத்தால் இதுவரை இவ்வளவு நாள் ஜம்முவில் பணியாற்றிவந்த அரசு அதிகாரிகள் மீண்டும் ஸ்ரீநகருக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்

English summary
Jammu and Kashmir government is all set to start functioning from here tomorrow for next six months after shifting from winter capital Jammu as part of pre-independence biannual Darbar Move practice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X