For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்டர் செய்ததோ செல்போன்.... டெலிவரி ஆனதோ சோப்பு கட்டிகள்

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கட்டிகள் வைக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்டர் செய்ததோ செல்போன்.... டெலிவரி ஆனதோ சோப்பு கட்டிகள்-வீடியோ

    டெல்லி : ஆன்லைன் ஷாப்பிங் மூலம் போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கட்டிகள் வைக்கப்பட்டு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைன் ஷாப்பிங் மூலம் உட்கார்ந்த இடத்தில் அனைத்து பொருள்களையும் வாங்கி குவிக்கும் பழக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு நிறுவனங்கள் பொருள்களை விற்பனை செய்து வருகின்றன.

    இவற்றில் மளிகை பொருள்கள், காய்கறிகள், காஸ்மெடிக் பொருள்கள், துணிமணிகள், காலணிகள், எலக்ட்ரானிக் பொருள்கள், எலக்ட்ரிக்கல் பொருள்கள் என அனைத்தும் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும்.

    வியாபாரம் ஜோர்

    வியாபாரம் ஜோர்

    இதில் முக்கியமாக மக்கள் விரும்பி வாங்குவது ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களையே ஆகும். ஷோரூமில் சென்று வாங்குவதற்கும் ஆன்லைனில் வாங்குவதற்கும் விலை மலிவு இருக்கும் என்பதுதான்.

    ஆரம்பத்தில் பயம்

    ஆரம்பத்தில் பயம்

    ஆரம்பத்தில் ஆன்லைன் மூலம் வாங்கும்போது அந்த பேக்கிங்கில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும் என்பதால் அதை வாங்குவதை மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் போக போக சில முன்னணி நிறுவனங்களின் மீது நம்பிக்கை வைத்து பொருள்களை ஆர்டர் செய்தனர்.

    டெல்லி நபர் வாங்கிய செல்போன்

    டெல்லி நபர் வாங்கிய செல்போன்

    டெல்லியை சேர்ந்தவர் சிராக் தவான். இவர் அமேசான் நிறுவனத்தில் கடந்த 7-ஆம் தேதி புதிய ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்தார். அது அவருக்கு 11-ஆம் தேதி டெலிவரி ஆனது.

    ஆசையாக திறந்தார்

    ஆசையாக திறந்தார்

    புத்தம் புது போன் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம்தானே. அதனால் ஆசையுடன் பேக்கிங்கை திறந்து பார்த்தார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    பார்த்தவர் அதிர்ச்சியில் வாயடைத்து போய் நின்றார். அந்த பேக்கிங் டெல்போனுக்கு பதிலாக 3 கட்டி சோப்புகள் பேக் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து சிராக் தவான் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த போஸ்ட் வைரலாக பரவியது.

    அதிர்ஷ்டவசமாக...

    அதிர்ஷ்டவசமாக...

    அதிர்ஷ்டவசமாக அமேசான் நிறுவனத்தினர் எனக்கு போனை அனுப்பி பிரச்சினை சரி செய்தனர். இதனால் சிராக் மன நிம்மதி அடைந்தார்.

    English summary
    when a Delhi man ordered a smartphone online but instead received three bars of detergent soap.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X