மோடியால் மனைவியின் சடலத்துடன் தெருவோரம் 2 நாட்களாக இருந்த கூலித் தொழிலாளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நொய்டா: நொய்டாவில் தினக்கூலி ஒருவர் தனது மனைவியின் சடலத்தை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் இரண்டு நாட்களாக காத்திரு்த கொடூரம் நடந்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8ம் தேதி தடை விதித்தார். அதில் இருந்து நாட்டில் பணத் தட்டுப்பாடாக உள்ளது.

Demonetisation: Dailywage waits with wife's corpse for 2 days

வங்கி கணக்கில் பணம் இருந்தாலும் அதை எடுக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை. இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த முன்னி லால்(66) என்ற தினக்கூலியின் மனைவி பூல்வதி(61) புற்றுநோயால் திங்கட்கிழமை மரணம் அடைந்தார்.

அவரின் உடலை அடக்கம் செய்ய கையில் பணம் இல்லை. இதையடுத்து ஒரு பிளாஸ்டிக் டென்ட் போட்டு தனது மனைவியின் சடலத்தை அங்கு வைத்தார். மகன்களை அழைத்து வங்கியில் பணம் எடுத்து வருமாறு கூறினார்.

வங்கிக்கு சென்ற அவர்கள் பணம் இல்லை என இரண்டு நாட்களாக திரும்பி வந்தனர். வங்கி அதிகாரிகளிடம் நிலைமையை சொல்லியும் பலனில்லை. இதையடுத்து புதன்கிழமை தான் வங்கியில் இருந்து ரூ.15 ஆயிரம் பணம் எடுத்து பூல்வதியை அடக்கம் செய்துள்ளனர்.

லால் தனது மனைவியின் சடலத்துடன் இரண்டு நாட்களாக பணத்திற்காக காத்திருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 66-year old daily wage waited for money for two days with his wife's corpse in Noida.
Please Wait while comments are loading...