மகள் ஜிவாவை ‘லெப்ட், ரைட்’ வாங்கிய டோணி... சுதந்திர தின ஸ்பெஷலாம்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தனது மகள் ஜிவாவுக்கு லெப்ட் ரைட் போட்டு சல்யூட் அடிக்கக் கற்றுக் கொடுத்து அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று இந்த வீடியோவை எடுத்துள்ளார் டோணி. தனது மகளை ராணுவத்தினர் போல லெப்ட் ரைட்போட்டு நடக்க வைத்துள்ளார். கூடவே சல்யூட் அடிக்கவும் கற்றுக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "முடிந்தவரை சொல்லிக் கொடுத்தேன். முழுமையாக வரவில்லை. ஆனாலும் பரவாயில்லை. நன்றாகவே இருந்தது" என்று மகள் குறித்து பெருமைப்பட்டுள்ளார் டோணி.

மகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்.. லைப்ட் ரைட் போடச் சொல்லித் தருவது எவ்வளவு ஜாலியானது என்று!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MS Dhoni teaching Ziva salute & army drill on Independence Day, Watch MS Dhoni posted a video of daughter Ziva doing an army drill on Instagram and it is too cute.
Please Wait while comments are loading...